Home » ஒரு புதிய சில்லுப்புரட்சி!
அறிவியல்-தொழில்நுட்பம்

ஒரு புதிய சில்லுப்புரட்சி!

சில்லு என்று பழங்கணினி ஆய்வாளர்களால் கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும், சிப் (CHIP) அல்லது IC (Ingegrated Circuit) எனப்படும் கணினி மற்றும் அனைத்து கணினிசார் கருவிகளுக்கும் இதயம் போன்ற இதன் இருப்பு, சர்வ நிச்சயமாக சில்லரை விஷயம் இல்லை.

சிலிக்கான் என்னும் பிரத்யேக மண் – தனிமம்தான் சிப்-களின் ஆதாரஸ்ருதி. சிலிக்கானைக் கொண்டு வட்ட வடிவச் செதில்களில் அச்சிடப்பட்ட மின்னணுச் சுற்றுகளின் தொகுப்புதான் மொத்த ஆகிருதியுமே. எலக்ட்ரானிக் சர்க்யூட்கள் டிரான்சிஸ்டர்களின் உதவியுடன் அவை செயலூக்கப்படுத்தப் படுகின்றன. இவை செய்யும் அடிப்படையான காரியம் மின்னோட்டத்தை வருவிக்கிற அல்லது தடை செய்கிற ஒரு சிறிய ஸ்விட்ச் செய்யும் வேலை போலத்தான். என்றாலும் இந்தச் சிறிய மூர்த்தி தரும் கீர்த்திகள் அளப்பரியன.

இந்தச் சிப்கள் கண்டுபிடிக்கப்பட்டதுதான், இப்போது நாம் வாழும் கணினி யுகத்தின் முதல் புரட்சி. இப்போது அங்கிருந்து நெடுந்தூரம் வந்து விட்டோம். இப்போது இரண்டாவது புரட்சிக்கான காலமும் சித்தித்திருக்கிறது.

ஆம், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் முன்னோடிகளுள் ஒன்றான ஓப்பன் ஏஐ, செயற்கை நுண்ணறிவு சிப்களை (AI Chip), தானே தயார் செய்துகொள்ளும் ஏற்பாட்டினை மேற்கொண்டிருக்கிறது என்ற செய்திதான் அது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!