Home » புத்தம் புது வேலை வரும்
அறிவியல்-தொழில்நுட்பம்

புத்தம் புது வேலை வரும்

செயற்கை நுண்ணறிவு மாபெரும் வேலையிழப்பை ஏற்படுத்தப் போகிறது என்ற பயம் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏ.ஐ என்னும் நுட்பம் வந்தபிறகு இவ்வாறான பயம் அதிகரித்துள்ளது.

இப்பயம் முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி விட முடியாது. மனிதனால் மட்டுமே செய்ய இயலும் என்று நாம் காலங்காலமாய் நம்பிவந்த பலவற்றையும் இன்று ஏ.ஐ. செய்யத் தொடங்கியுள்ளது.

இதே நிலைமை தொடர்ந்தால் மனிதன் செய்யும் அனைத்துப் பணிகளையும் ஏ.ஐ. செய்துவிடும் என்னும் நிலை வரக்கூடும். எனவே நாமெல்லாம் வேலைகளை இழந்து பயனற்ற மனிதர்களாக ஆகிவிடுவோம் என்று பீதியைக் கிளப்பும் கருத்தியலொன்று பரவலடைந்து வருகிறது.

வேலை இழப்பு என்னும் இப்பயம் ஏற்படுவது இதுவே முதன்முறை அல்ல. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், எப்போதெல்லாம் மனிதன் செய்யும் செயலை இயந்திரம் ஒன்று செய்ய இயலும் என்றொரு நிலை வந்திருக்கிறதோ அப்போதெல்லாம் இப்பயம் எழுந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Informative article on technology trends and new job roles that will be made available. Instead of complaining about challenges in retaining old jobs people should prepare well in advance for the upcoming jobs.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!