Home » Archives for September 2022 » Page 5

இதழ் தொகுப்பு September 2022

நம் குரல்

‘நீட்’ என்னும் வன்முறை

இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவுமே நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக பாஜக அரசு பேசியது. அதிலிருந்து விலக்குக் கேட்கும் தமிழகத்திற்கும் பிடிவாதமாகத் தர மறுக்கிறது...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 16

16. விலகிப் போ! வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொல்லப் போனால் அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் அதைத்தான் மனிதகுலம் விரும்புகிறது. வெற்றி என்பது நம்முடைய பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம். – ஓஷோ ஓஷோவிடம் ஒரு பெண் தன் மகனை...

Read More
ஆளுமை உலகம்

ராணியாக வென்று மாமியாராகத் தோற்றவர்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள்...

Read More
உலகம்

மேகத்தை ஏமாற்றுவோம்!

‘ஸீடிங்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். விதைத்தல். ‘க்ளவுட் சீடிங்’ என்றால் என்னவென்று தெரியுமா..? அப்படியே மொழிபெயர்த்து ‘மேகத்தை விதைப்பது அல்லது மேகத்தில் விதைப்பது என்றால் குழப்பும். ஆனால், மேகத்தை மெலிதாக ஏமாற்றுவது எப்படி, அதனால் என்ன பயன் என்பதைத் தெரிந்து கொண்டால் முழுமையாகப்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 16

16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும்...

Read More
நினைவில் வாழ்தல்

அறிவியலும் சில அமெரிக்க அத்தைப் பாட்டிகளும்

வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில மூத்த குடி அமெரிக்கப் பெண்களுடன் பேசினோம். அவர்களின் பாட்டி காலத்தில், குளிர் காலத்தில் துணிமணிகளைத் துவைத்தபின் தண்ணீரைப் பிழிய ‘மாங்கிள் வ்ரிங்கர்’...

Read More
வர்த்தகம்-நிதி

கிரிப்டோ வர்த்தகம்: இது வேறு உலகம்

சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட...

Read More
நினைவில் வாழ்தல்

நேற்றைய காற்று

தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு உள்ளதைப் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது. இணையத் தொடர்பு என்பதே கோயில் பிரசாதம் போலக் கொஞ்சமாகக் கிடைக்கிற ஒரு சங்கதிதான்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர்குலம் – 15

15. எடிட்டிங் ஆங்கில எழுத்துருக்களை பெரியவை (கேபிடல் லெட்டர்ஸ்) என்றும் சிறியவை (ஸ்மால் லெட்டர்ஸ்) என்றும் வகை பிரிப்போமல்லவா? அதன் பின்னணி என்ன தெரியுமா..? உலோகப் பாளங்களால் ஆன எழுத்துருக்களை வரிசையாக அடுக்கி அச்சுக் கோத்து அதன் மூலமாக வாக்கியங்களை உருவாக்கும் பழைய அச்சிடும் முறையில் எழுத்துருப்...

Read More
நினைவில் வாழ்தல்

‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது. வாலிபப் பருவமடைந்த போது நாடு முழுவதற்குமான ஒளிபரப்பாக மாறுகிறது. 1982 சுதந்திர நாளில் பட்டிதொட்டிகளில் தன் காலைப் பதிக்கிறது அல்லது சிறகை விரிக்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!