Home » Archives for September 2022

இதழ் தொகுப்பு September 2022

நிதி

சம்பாதிக்கும் கலை

அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்;...

Read More
நிதி

சேமிக்கும் கலை

தாங்கிப்பிடிப்பது தவிர மூக்குடன் வேறொரு தொடர்பும் இல்லாத ’அகாரண’ப் பெயர் கொண்ட மூக்குக்கண்ணாடி வாங்கப் போயிருந்தேன். நான் தேர்வு செய்திருந்த பிரேமில் லென்ஸ் பொருத்தியிருந்தார்கள். சீட்டைக் கொடுத்ததும், டிராயரைத் திறந்து வெளியே எடுத்தார். கண்ணாடியைவிட அந்தப் பெட்டி பிரமாதம், செல்போன் பெட்டிகளைப்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 18

18 புகை சைக்கிளில் இருந்து இறங்கும்போது, மொட்டை மாடியில் ஆண்ட்டனா இருக்கிறதா என்று அனிச்சையாகத் தலை அண்ணாந்தது. அதற்குள் எப்படி டிவி வந்திருக்கமுடியும் என்று அவனுக்கே அபத்தமாகப் படவே, ஆனாலும் தான் இவ்வளவு பரக்காவெட்டியாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. 0 வீட்டுக் கதவை வேகமாகத் தட்டினான்...

Read More
நிதி

செலவு செய்யும் கலை

சம்பாதிப்பது பெரிய விஷயமே அல்ல. அதை கட்டிகாப்பாற்றுவது தான் பெரிய விஷயம். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பலருக்கும் திடீரென பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். திடீரென நின்றும் விடும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் அதைச் சேமிக்க வேண்டும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் காலங்களில் பற்றாக்குறையை...

Read More
நம் குரல்

மனுதர்மம் என்னதான் சொல்கிறது?

‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...

Read More
கல்வி

ஒரு மைதானத்தின் கதை

சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ளது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரிக்கு இன்று 102 வயது. சென்னையின் புராதனமான அடையாளங்களுள் ஒன்றான இதன் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாமைச் சந்தித்துப் பேசினோம். ஆசியாவிலேயே உடற்கல்விக்காகத் துவங்கப்பட்ட முதல் கல்லூரி இது. இதன் நிறுவனர் ஹாரி க்ரோவ் பக். இந்தியாவிற்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 18

18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...

Read More
நிதி

FIRE: நெருப்பாற்றில் நீந்தும் கலை

குறைந்தபட்சம் ஐம்பத்தெட்டு வயது. அதிகம் போனால் அறுபது. ஓய்வு பெற்றுவிட்டதாக ஊருக்கு அறிவித்துவிட்டுக் கோயில் குளம் என்று சுற்றிக்கொண்டிருந்த தலைமுறை சில காலம் முன்னர் வரை இருந்தது. இன்று நிலைமை வேறு. முப்பது முப்பத்தைந்தில் வேலையை விட்டுவிடத் துடிக்கிறது இன்றைய தலைமுறை. இன்றைய இளைஞர்கள் –...

Read More
உலகம்

லெஸ்டர் கலவர காண்டம்: உருவாகும் புதிய அபாயம்

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதக்கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக அவற்றுக்கு அரசியல்வாதிகள் காரணமாக இருப்பார்கள். சமயத்தில் மக்களும். இந்த மாதம் இங்கிலாந்திலும் மதம் சார்ந்த கைகலப்புகள் நடைபெற்றன. அதுவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியோரின்...

Read More
நகைச்சுவை

ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ

யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் இந்த சீரிஸ் பார்த்தேன், அந்த சீரிஸ் பார்த்தேன் என்று வாய் ஓயாமல் சீரிஸ் புராணம்தான் பாடுகிறார்கள். வாயால் பாடுவதோடு முடிகிறதா என்றால் கிடையாது. ஒரு பொம்மையைப் போட்டு ஃபேஸ்புக்கில் முழ நீளத்துக்கு விமரிசனம் வேறு எழுதிவிடுகிறார்கள். உலகத் தரம், உலகத் தரம், உலகத் தரம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!