குறைந்தபட்சம் ஐம்பத்தெட்டு வயது. அதிகம் போனால் அறுபது. ஓய்வு பெற்றுவிட்டதாக ஊருக்கு அறிவித்துவிட்டுக் கோயில் குளம் என்று சுற்றிக்கொண்டிருந்த தலைமுறை சில காலம் முன்னர் வரை இருந்தது. இன்று நிலைமை வேறு. முப்பது முப்பத்தைந்தில் வேலையை விட்டுவிடத் துடிக்கிறது இன்றைய தலைமுறை.
இன்றைய இளைஞர்கள் – குறிப்பாக, மென்பொருள் துறையில் இருப்பவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பது Financial Independence & Early Retirement. சுருக்கமாக FIRE. அதாவது நிதி சுதந்திரம் மற்றும் முன்கூட்டியே ஓய்வுபெறுவது.
FIRE பற்றி மிக அருமையான பதிவு.
யார் வேண்டுமானாலும் பின்பற்றும் வகையில் எளிமையான விளக்கம்.