யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் இந்த சீரிஸ் பார்த்தேன், அந்த சீரிஸ் பார்த்தேன் என்று வாய் ஓயாமல் சீரிஸ் புராணம்தான் பாடுகிறார்கள். வாயால் பாடுவதோடு முடிகிறதா என்றால் கிடையாது. ஒரு பொம்மையைப் போட்டு ஃபேஸ்புக்கில் முழ நீளத்துக்கு விமரிசனம் வேறு எழுதிவிடுகிறார்கள். உலகத் தரம், உலகத் தரம், உலகத் தரம். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. இதில் இன்னொரு நுட்பம் என்றால் இவர்கள் விமரிசனம் எழுதும் சீரிஸ் எல்லாம் ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச் வகையறாக்களாகவே இருக்கின்றன. வரவர ஆங்கிலமே அபிஷ்டு மொழியாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
பின்னி பெடலெடுத்தாச்சு! டோபமைன் புது தகவல் ! சினிமாவே பரவாயில்லை என்று தோன்றுகிறது! மூன்று மணிக்கு பிறகு ஜூட்!
விஸ்வநாதன்
உங்கள எழுத்தில் இழையோடும் மெல்லிய நகைச்சுவைக்காக உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன்.
Nice one.