தாங்கிப்பிடிப்பது தவிர மூக்குடன் வேறொரு தொடர்பும் இல்லாத ’அகாரண’ப் பெயர் கொண்ட மூக்குக்கண்ணாடி வாங்கப் போயிருந்தேன். நான் தேர்வு செய்திருந்த பிரேமில் லென்ஸ் பொருத்தியிருந்தார்கள். சீட்டைக் கொடுத்ததும், டிராயரைத் திறந்து வெளியே எடுத்தார். கண்ணாடியைவிட அந்தப் பெட்டி பிரமாதம், செல்போன் பெட்டிகளைப் போலவே. ஆவலுடன் கையை நீட்டினேன். தரவில்லை. என் கையை லாகவமாகத் தவிர்த்துவிட்டு, தனது இரண்டு கைகளாலும் கண்ணாடியை எடுத்து அவரே மாட்டிவிட்டார்.
”எப்பக் கண்ணாடியை மாட்டினாலும், கழட்டினாலும் ரெண்டு கைல செய்யுங்க சார். பிரேம் லூஸ் ஆகாது” என்றார்.
Add Comment