Home » தமிழகத் தேர்தல் களம்: கூடி வாழும் குருவிகள்
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: கூடி வாழும் குருவிகள்

நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சியும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்திருப்பதோடு பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. இந்தக் கூட்டணிகளின் தற்போதைய நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

தி.மு.க. கூட்டணி:

பிற கூட்டணிகளைவிட தி.மு.க. கூட்டணி இந்தத் தேர்தலை எதிர்கொள்வதில் முன்னணியில் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்கான தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்தது. காங்கிரசுக்கான எண்ணிக்கையை வேகமாக இறுதி செய்துவிட்டாலும் எந்தத் தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்குவது என்பதில் மட்டுமே தாமதம் ஏற்பட்டது. கள நிலவரத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றிபெறத் தகுதியான தொகுதிகளை தி.மு.க.வே இறுதி செய்து அதை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்ளச் செய்தது தி.மு.க.வின் சாதனைதான். ம.தி.மு.க.வுக்குக் கொடுக்கப்பட்டது ஒற்றைத் தொகுதி. அவர்கள் திருச்சி தொகுதியைக் கேட்க காங்கிரசின் திருநாவுக்கரசர் பலமாக இருக்கும் அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்தனர்.

பா.ஜ.க.வை எதிர்ப்பது என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணியின் கட்சிகள் தங்களுடைய சுய இலாபத்தை சில இடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. விடுதலைச் சிறுத்தைகளின் நியாயமான 3 தொகுதிகள் என்ற கோரிக்கையைக் கூட்டணிக் கட்சிகளின் நலன் கருதி 2 தொகுதிகளாகக் குறைத்துக் கொண்டது அதற்கு ஓர் உதாரணம். சிதம்பரத்தில் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!