Home » கழகக் குடும்பமும் குடும்பக் கழகமும்
தமிழ்நாடு

கழகக் குடும்பமும் குடும்பக் கழகமும்

“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும் (தி.மு.க.) அப்படித்தான். கட்சித் தலைவர், அமைச்சர்லாம் விடுங்க. பெரிய விஷயம். மாவட்ட செயலாளர் பதவிக்குக் கூடக் கீழ இருந்து யாரும் வர முடியாது. மாவட்டச் செயலாளரே மந்திரியாவும் சுமார் இருபது பேர் இருப்பாங்க. ரெண்டுல ஒண்ணை விட்டுக் கொடுக்கக்கூட யாரும் விரும்பமாட்டாங்க. அது தான் யதார்த்தம். ஒரு குடும்பம் ஒரு பதவில்லாம் பேச்சுக்கு நல்லாருக்கும். நடைமுறைக்கு ஒத்துவராது சார். இது எல்லாத்துக்கும் தெரியும். எங்களுக்குத் தெரிஞ்சதுல்லாம் கட்சி மட்டும்தான். கடைசி வரை அப்படியே இருந்துட்டுப் போவோம். வருத்தப்பட்டு என்னாகப் போகுது. பதவிக்காகக் கட்சி மார்றது தலைவர்கள் பழக்கம் சார். நாங்க அப்படி இல்ல” என்று சலனம் இல்லாமல் சொல்லி முடித்தார் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர். “குடும்பமே தி.மு.க. தான். இனிமேல்லாம் மாற்ற முடியாது. தேர்தல் சமயம் சார். பேரக்கீரப் போட்றாதீங்க” என்று சென்றுவிட்டார்.

தேர்தல் வந்தாலே கட்சி வித்தியாசம் இல்லாமல் வைக்கப்படும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இது தமிழகத்தில் மட்டுமல்ல…. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு தவிர்க்க முடியாத பிரச்சினை. வார்த்தைப் பிரயோகங்களைச் சாமர்த்தியமாக உபயோகித்து இதிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அரசியல்வாதிகள் அதிகம். எங்கள் வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிரானவர்கள் என்று தப்பித்துக் கொள்வார்கள். மற்றத் துறையினரின் வாரிசுகள் அந்தந்த துறையில் வரும்போது அரசியலில் வந்தால் மட்டும் என்ன தவறு எனச் சந்தர்ப்பம் பார்த்துப் பேசிக் கொள்வது அவர்கள் வழக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!