Home » சுற்றுலா » Page 3

Tag - சுற்றுலா

சுற்றுலா

சீதைக் கோட்டை

இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.  நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...

Read More
சுற்றுலா

சிறு மகிழ்ச்சியின் வண்ணக் கோடுகள்

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம்...

Read More
சுற்றுலா

மஞ்சூர்: தரையில் வரும் மேகம் தலை துவட்டிப் போகும்

மஞ்சூர்,  நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே இருக்கும் குளிரூர். நீலகிரி என்றால் ஊட்டி, குன்னூர்தானா? ஒரு மாறுதலுக்கு மஞ்சூருக்குச் சென்று பாருங்கள். அந்தக் கன்னிநிலத்தின் அமைதிக்காகவும், மாசுபடாத...

Read More
சுற்றுலா

குகையில் அமர்ந்து எழுதிய நூல்கள்

விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...

Read More
சுற்றுலா

அடியாத்தி, அலையாத்தி!

ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்றால் தெரியும்தானே? கிட்டத்திட்ட அப்படியான ஒரு வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் அலையை ஓயாமல் ஆற்றித் திரும்பக் கடலுக்கே அனுப்புவார்கள். அது சீறும் அலைகளானாலும் சரி சாந்தப்படுத்தி கடலுக்கே மீண்டும்...

Read More
சுற்றுலா

கல்லால் எழுதிய கடலோரக் கவிதை

காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்…  இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு...

Read More
சுற்றுலா

யானையைக் கொஞ்சுவோம்!

ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும். நன்கு குளிப்பாட்டி, வெயிலில் தலைகாய வைத்து, வயிறார ஊட்டிவிட்டு, அப்படியே தோளில் போட்டு உலவிக்கொண்டே குழந்தைகளைத் தூங்க வைப்போமில்லையா? இதைத்தான் நீங்கள் அங்கு வளரும்...

Read More
சுற்றுலா

அரபிக் கடலும் அருளும் பொருளும்

சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும்.   இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள்.  மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...

Read More
சுற்றுலா

சாமியும் சாம்பார்ப் பொடியும்

முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு, ஷ்ரிங்கேரி, தர்மஸ்தலா, முர்டேஷ்வர், கொல்லூர் மற்றும் சுப்ரமணியா என இந்த ஏழையும் சேர்த்து அங்கே சப்த க்ஷேத்திரங்கள் என்பார்கள். இவையனைத்துமே மங்களூரு மற்றும்...

Read More
சுற்றுலா

புனிதம் பூசிய நகரம்

அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!