Home » மஞ்சூர்: தரையில் வரும் மேகம் தலை துவட்டிப் போகும்
சுற்றுலா

மஞ்சூர்: தரையில் வரும் மேகம் தலை துவட்டிப் போகும்

மஞ்சூர்
மஞ்சூர்,  நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே இருக்கும் குளிரூர்.
நீலகிரி என்றால் ஊட்டி, குன்னூர்தானா? ஒரு மாறுதலுக்கு மஞ்சூருக்குச் சென்று பாருங்கள். அந்தக் கன்னிநிலத்தின் அமைதிக்காகவும், மாசுபடாத காற்றுக்காகவும், அதன் இதமான குளிருக்காகவும், சுற்றிச்சுற்றிக் கண் நிறைக்கும் பச்சையும், நீலமும் கலந்த மலைத்தொடர்களின் காட்சிக்கோவைகளுக்காகவும்தான். சொக்கிவிடுவீர்கள்.

உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்