Home » சுந்தரத் தமிழும் நுட்ப தெய்வமும்
தமிழ்நாடு

சுந்தரத் தமிழும் நுட்ப தெய்வமும்

Pots to Bots என்ற மிகப்பொருத்தமான துணைத்தலைப்பு கொண்டு நிகழ்ந்த கணித்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்தது, இந்தத் துணைத்தலைப்பின் மொத்த சாரம்சத்தையும் அனுபவித்து மகிழ்வது போன்று இருந்தது.
கற்காலப்பானைத்தமிழைப்பற்றி நன்கறிந்து வகுப்பெடுத்த தமிழ்ப்பேராசிரியர். தற்போது அதே தமிழை கணினிக்காலத்தில் நுட்ப வழி செலுத்தி புதுமை செய்யும் நுட்பவியலாளர் என்ற இரண்டு பெருவழிகளிலும் பயணப்பட்ட பேராசிரியர் என்பதால் அவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்வையும், வரலாற்றின் இருபெருமுனைகளை இணைக்கும் தருணமாக நெகிழ்வு கொடுப்பதாகவும் இருந்தது.

மொழியியலிலும், தமிழ் இலக்கணத்திலும் நல்ல புலமை கொண்ட தெய்வசுந்தரம் அவர்கள், இளங்கலையில் படித்தது இயற்பியல்தான். அதன்வழியே தனது கணித, கணினி அடிப்படைகள் தொடங்கிவிட்டதாகச்சொல்கிறார். அங்கிருந்து முதுகலையில் தமிழ்ப்பட்டம், முனைவர் ஆய்வும் தமிழிலேயே செய்து சென்னைப்பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
கணினி மொழியியல் – Computational Linguistics என்கிற மேம்பட்ட கணினித் தொழில்நுட்பத்தை மொழியியல் கோட்பாட்டுடன் இணைக்கும் துறையின்மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். இவர் கணினியியல் துறைத்தலைவராக இருந்தபோது, சென்னைப்பல்கலைக்கழகத்தில் இதற்கான தனித்துறையை உருவாக்கியிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!