Home » தமிழுக்குத் தடை சொல்லாத சர்வாதிகாரம்
தமிழ்நாடு

தமிழுக்குத் தடை சொல்லாத சர்வாதிகாரம்

ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால் தனியாகச் செல்லலாம். நெடுந்தூரம் செல்வதென்றால் அனைவருடனும் இணைந்து நடக்க வேண்டும்` என்பதைச் சுட்டிக்காட்டியே நிகழ்ந்தது..

கணித்தமிழ்24 மாநாட்டில் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்ததும் அவருடன் பேசியவற்றின் தொகுப்பை இங்கே வெளியிடுவதும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறோம்.

மகிழ்நன் அருணாச்சலம் என்பது அவரது இயற்பெயர். இந்தப் பெயரை உச்சரிப்பதில் பலருக்குச் சிக்கல் இருக்கவே தன் பெயரை அருண் மகிழ்நன் என மாற்றிக் கொண்டார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர். தனது பதினான்காவது வயது வரை தமிழ் வழிப் பள்ளிகளில் கல்வி பயின்றார். அதன் பிறகு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். மாணவப் பருவத்திலேயே ஊடகத் துறையில் நுழையும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!