Home » வேண்டாத உருப்படிகள்
நம் குரல்

வேண்டாத உருப்படிகள்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில் பதினெட்டு வயது நிறைந்த புதிய தலைமுறை. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்பது நமது கடமை.

பொதுவாக நமது வீடுகளில் – பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாக்களிக்கச் செல்லும் மகன், மகள், மருமகளிடம் யாருக்கு வாக்களிப்பது நல்லது என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ வீட்டுப் பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள். சில இடங்களில் அது கருத்துத் திணிப்பு முயற்சியாக மட்டும் இருக்கலாம். பெரும்பாலும் ஒரு ஓட்டு வீணாகிவிடக் கூடாது என்ற எண்ணமே அப்படிச் சொல்ல வைக்கும். மாபெரும் ஜனநாயக நாட்டில் பொதுமக்களுக்கென விட்டுவைக்கப்பட்டிருக்கும் ஒரே பெரிய ஆயுதம் அதுதான்.

இன்றைய இளைஞர்களுக்குத் ‘தேர்ந்தெடுக்கும்’ விஷயத்தில் இன்னொருவர் கருத்து அநேகமாக அவசியமில்லை. ஒலிக்கவிடும் பாட்டானாலும் சரி; அளிக்கவிருக்கும் ஓட்டானாலும் சரி. அவர்கள் சரியாகவே தேர்ந்தெடுப்பார்கள். தேவை ஏற்படுமானால் நண்பர்கள் கூடிப் பேசியும் முடிவுக்கு வருவார்கள்.

ஆனால் சட்ட மன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை ஆகிறது. ஊருக்கு பஸ் வரவில்லையென்றாலோ, குழாயில் குடிநீர் வரவில்லையென்றாலோ, வீதி விளக்கு எரியவில்லையென்றாலோ, சாலைகள் போடப்படாமல் இருந்தாலோ, குப்பைகள் அள்ளப்படவில்லையென்றாலோ – இன்ன பிற பொதுவான பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் எது சட்ட மன்ற உறுப்பினர் தீர்க்க வேண்டியது, எது நாடாளுமன்ற உறுப்பினர் தீர்க்க வேண்டியது, எது உள்ளாட்சி அமைப்பு சரி செய்ய வேண்டியது என்கிற தெளிவு இருக்கவேண்டியது முக்கியம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • வெகு சிறப்பு, நமது மெட்ராஸ் பேப்பரில் நம் குரலாக தலையங்கம் எல்லாமே மிக பாராட்டத்தக்கவையாக, பெரும் மக்கள் திரளுக்கு சென்று சேர்க்கக் வேண்டியவையாக பரந்த பார்வை உடையதாக இருப்பதை எப்போதும் கண்டு வருகிறேன். அருகிவரும் ஊடக தர்மத்தை இங்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகராக நான் பெருமைப் படுகிறேன்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!