மார்கழி மாதக் கடுங்குளிரும், பனியும் மேட்டு லயத்தையும், லயத்தை அண்மித்து நின்ற மலைத் தொடர்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. லயன் குடியிருப்புகளின் சில்லிடுகிற நிலத்தின் குளிர்ந்த தன்மை மாற சூரியன் வரவேண்டும். அதுவரை உடலை நடுக்குகின்ற குளிரை தாங்க முடியாது இருந்தது. மேட்டு லயத்தின் முன் பரப்பில் நிலத்தோடு படர்ந்த ஒரு சிறு பாறை இருந்தது. காடு நிறைந்த இந்த மரங்களையும், மலைகளையும் தாண்டி விழுகிற கதகதப்பான சூரிய வெயிலில், விடிந்ததும் அங்கு வந்தமர ஒரு சிலர் இருந்தனர். சின்னச்சாமி பாறையில் வந்து குந்தினான். திறந்து விடப்பட்ட மயிலு பாட்டியின் இரண்டு சேவல்களும், ஒரு பெட்டை கோழியும் அவற்றின் இறக்கையை கீழே ஒரு பக்கமாக இழுத்து சூரியக் கதகதப்பைப் பெற்றுக் கொண்டிருந்தன. அந்தச் சேவல்கள் மாறி மாறி சின்னச்சாமியின் காது செவிடாகும் அளவு கூவித்தொலைத்தன. பக்கத்தில் கிடந்த சிறிய கல்லில் ஒன்றைத் தேடி அவன் “போய் அந்தப் பக்கமா கூவித்தொல” என்று விட்டெறிந்தான். அவை ஆளுக்கொரு பக்கமாக காட்டுப் பக்கமாகச் சிதறி ஓடின.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Comment
-
Share This!
Add Comment