இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...
Author - நர்மி
நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ‘சீதாஎலிய’ அம்மன் கோயில். நமக்கு முன்னால் – ராமாயண காலத்தில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் முன்னால் இலங்கைக்கு வந்தவளல்லவா சீதை? அந்தத் தொடர்பு...
மார்கழி மாதக் கடுங்குளிரும், பனியும் மேட்டு லயத்தையும், லயத்தை அண்மித்து நின்ற மலைத் தொடர்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. லயன் குடியிருப்புகளின் சில்லிடுகிற நிலத்தின் குளிர்ந்த தன்மை மாற சூரியன் வரவேண்டும். அதுவரை உடலை நடுக்குகின்ற குளிரை தாங்க முடியாது இருந்தது. மேட்டு லயத்தின் முன்...
மனிதர்கள் சில இடங்களில் வாழ்ந்துவிட நினைக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் விடுகிறார்கள் அல்லது ஒவ்வொருவரும் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். அதன்பின் அந்த இடத்தைத் தாம் மரணிக்கும் வரை தம்முடனேயே கொண்டு செல்கிறார்கள். நான் நினைக்கிறேன்- அதிகளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் அப்படி ஒவ்வொரு...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...
பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது...
சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும். ரஜினிகாந்தும் விவேக்கும் ரஜினிக்கு நல்ல தமிழ்ப் பெண்ணாகப் பார்க்க கோவிலுக்குப் போவார்கள். ஒன்றும் வாய்க்கிற மாதிரி இல்லையென்றானதும், விவேக் சொல்லுவார், ‘நீ கேக்குற மாதிரி தமிழ்ப் பொண்ணுங்க எல்லாம் லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயாச்சு. இன்னும் ரெண்டு கோவில்...
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீரழிவுச் சூழல் அந்நாட்டின் கல்வித் துறையின் மீது ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கத்தை விவரிக்கிறார் நர்மி. இலங்கையின் வரலாறு விசித்திரமானது. சுதந்திரத்திற்கு பின்னர் நிலையான அரசியலை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளது. ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதைத்...
பசித்தால் சாப்பிடுகிறோம். ருசியாக இருந்தாலும் சாப்பிடுகிறோம். பிடித்ததை உண்கிறோம். கிடைப்பதை உண்கிறோம். ஆனால் உண்பதற்குச் சில ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்வோமா? சரவண பவனிலோ, சங்கீதாவிலோ கேட்க மாட்டார்கள். இதே ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றால் நம்...
இலங்கை திவால் நிலைக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், அரசின் தவறான விவசாயக் கொள்கையும் அது சார்ந்த திடீர் சட்டங்களும்தான். அதன் விளைவு தற்போது ஒட்டுமொத்த விவசாயத்தையும் கைவிட்டு விடும் நிலைமைக்குச் சென்றுள்ளனர் இலங்கை விவசாயிகள். விவசாயம் போனால் நாட்டின் கதி என்ன ஆகும்? ‘சுபீட்சத்தின் நோக்கு’என்று...