Home » விதைத்தது போதும், வீறு கொண்டெழு!
உலகம்

விதைத்தது போதும், வீறு கொண்டெழு!

விளைநிலத்தை உழும் டிராக்டர்கள், ஐரோப்பாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை நிறைத்திருக்கிறது. மண்ணைத் தளர்த்தி, விதையிடத் தயாரிப்பதே உழுதல். சட்டங்களைத் தளர்த்த, ஆட்சியாளர்களைத் தயாரிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன இந்த டிராக்டர்கள். விவசாயம், விவசாய இனம், இரண்டும் நீடித்திருக்கவே ஐரோப்பிய விவசாயிகள் போராடுகிறார்கள்.

குளிர்காயும் நெருப்புக்குழிகளைச் சுற்றி விவசாயிகளும், அவர்களது குடும்பங்களும் போராட்டக்களத்தில் தங்கியிருக்கிறார்கள். COPA எனும் 23 மில்லியன் விவசாயிகளைக் கொண்ட சங்கமும், COGECA எனும் 22,000 வேளாண் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து நடத்தும் போராட்டம் இது. வணிகர்கள், பொதுமக்கள், ஓய்வுபெற்ற காவலாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் போராடுகின்றனர். “குடியரசு இறந்து கொண்டிருக்கிறது. அதைக் கொன்றது அரசாங்கமே” எனும் பதாகைகள் உள்ளன. போலந்து தொடங்கி ஸ்பெயின் வரை, ஜெர்மனி முதல் கிரீஸ் வரை, ஐரோப்பா முழுதும் போராட்டம் பரவிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!