Home » Archives for வினுலா

Author - வினுலா

Avatar photo

உலகம்

பாட்டில் பூதம்

‘உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது டிஜிட்டல் உலகிலும் செல்லுமா என்பது தெரியவில்லை. ‘நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டிலைக் காட்டு. எந்த நாட்டில் இது தயாரிக்கப்பட்டதென்று சொல்கிறேன்.’ என்று சவால் விடத் தயாராக இருக்கின்றனர் கடல் உயிரியலாளர்கள். இங்கிலிஷ் கால்வாயில்...

Read More
உலகம்

உயிரே! உதவாத என் உறவே! – திண்டாடும் உக்ரைன்

டொனால்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற நாள்முதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். ‘முதலில் அமெரிக்கா பிறகுதான் மற்ற நாடுகள்’ என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த உதவிகளை அடுத்த தொண்ணூறு நாள்களுக்கு நிறுத்தியிருக்கிறார். அமெரிக்க...

Read More
உலகம்

ஆட்சி மாறலாம்; அவலம் மாறுமா?

புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் கிடைப்பதே நிரந்தரமில்லை. வேலை, ஊதியம் இரண்டுமில்லாத மக்களிடம் வேறென்ன வசதிகள் இருக்கும்...

Read More
உலகம்

கோலாகல கோலா!

‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல வண்ணங்களில் கவருகிற மொஹிட்டோக்கள் வழியாகத்தான் ஈராயிரக் குழவிகளை அணுக முடியும். ஆனால் இன்றும் குளிர் பானம் என்றாலே பீட்சா ஹட் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை...

Read More
உலகம்

தென்கொரியா: கைப்பையும் கலவரமும்

சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த விமான விபத்துடன் சென்ற வருடத்தை நிறைவு செய்த தென் கொரியாவில் அரசியல் குழப்பங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளன. எல்லாம் ஒரு...

Read More
ஆண்டறிக்கை

ஒரு தூங்குமூஞ்சியின் அதிகாலைகள்: வினுலா

என் முதல் புத்தகத்தைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ட தருணத்தோடு தொடங்கியது 2024 ஆம் ஆண்டு. ‘யுத்த காண்டம்’ ஜீரோ டிகிரி அரங்கில் வைக்கப்பட்டிருந்ததை என்னைப் போலவே என் குடும்பத்தினரும் ஆவலுடன் பார்வையிட்டனர். ஆசிரியர் கையால் என் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த புகைப்படத்தை...

Read More
உலகம்

எல்லை மாற்றி எழுதும் இஸ்ரேல்

ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம். கிறிஸ்துமஸ் மணிகளின் வடிவில் மின்னலங்காரத்துடன் நுழைவு வாயில்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. தெருக்களில்...

Read More
உலகம்

வீழ்ந்தது பஷார் ஆட்சி; வென்றது யார்?

சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...

Read More
உலகம்

ஒரு யூரோ, ஒரு வீடு, ஒரு உலகம்

ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...

Read More
உலகம்

அரிஷ்நிக் ஏவுகணையும் ஆயிரம் நாள் தாண்டிய போரும்

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!