புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கண்டறியப்பட்டது 1930-ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு நாமெல்லாம் சூரியக் குடும்பத்தில் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கிரங்கள் என்றே படித்தோம். 2006-ஆம் ஆண்டு வான் விஞ்ஞானிகள், புளூட்டோ ஒரு தனிக்கோள் அல்ல, சூரியனைச் சுற்றி வந்தாலும் அதுவொரு குறுங்கோள் (Dwarf Planet)...
Author - காயத்ரி. ஒய்
விநாயகரை வழிபட்டு வணங்கி எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவது ஆதி காலத்திலிருந்தே நிலவிவரும் வழக்கம். கோயில் குடமுழுக்கில் தொடங்கிப் புது வீட்டுக்குக் குடி புகுவது வரையில் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் கணபதி ஹோமம் செய்தே தொடங்கி வைக்கப்படும். பெரிய நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகள் முதல் வீட்டு...
தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’ சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்? கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும்...
இந்தியாவின் பிரக்யான் ரோவர் நிலவில் பத்திரமாகத் தரையிறங்கிய தினத்தில் இன்னொரு சரித்திரச் சம்பவமும் நிகழ்ந்தது. உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் மேக்னஸ் கார்ல்ஸனுடன் ட்ரா செய்தார். செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன்...
ஒரு நாட்டு மன்னன் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது தமது படைகள் தங்குவதற்கென்றும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். இதுபோல் உள்ள இடங்களைப் பாடிவீடு என்று அழைப்பர். அப்படித்தான் சென்னையில் அண்ணா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இடத்திற்கு பாடி என்று...
பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன் கோயில்கள் இருப்பது போல பிரம்மாவுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது. அதற்கு காரணம் ஈசனின் சாபம். நெருப்புத் தூணாய் நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும், பிரம்மனும் புறப்பட்டனர். அடியைக் காண முடியவில்லை என மஹாவிஷ்ணு ஒத்துக்கொண்டார். ஆனால் முடியைக்...
சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி. இந்த மாதத்திற்கு ஆடி...
முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது தெரியும். அதே ஸ்தலத்தில் பிரம்மா விஷ்ணு முன்னிலையில் அவருக்கு இணையாகச் சக்தியும் ஆடிய கதை தெரியுமா? ஒரு முறை சிவன், சக்தி இருவருக்குமிடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என்கிற விவாதம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முற்றி கடும் சண்டையாக உருமாறியது. சிவன்...
ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு மயங்கியதால் கடத்தப்பட்டார். ஹனுமார், சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார். லக்ஷ்மணன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கைக்குச் சென்ற ராமர் இராவணனுடன்...