Home » கோயம்பேட்டுக்கு வந்த ராமரின் வாரிசுகள்
ஆன்மிகம்

கோயம்பேட்டுக்கு வந்த ராமரின் வாரிசுகள்

ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு மயங்கியதால் கடத்தப்பட்டார். ஹனுமார், சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார். லக்ஷ்மணன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கைக்குச் சென்ற ராமர் இராவணனுடன் போரிட்டார். சீதையை மீட்டார். அயோத்தியின் அரசன் ஆனார். சுபம். பிறகு என்ன ஆனது..?

ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்தால் அடுத்து வருவது சோகம் தானே? நாட்டு மக்கள் சிலர் தவறாகப் பேசியதால் கர்ப்பவதியான சீதையைக் காட்டுக்குள் அனுப்பிவிடுகிறார் ராமர். காட்டில் ஆசிரமம் வைத்திருக்கும் வால்மீகி மகரிஷி, சீதைக்கு அடைக்கலம் தருகிறார். அங்கு இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார் சீதா பிராட்டி. லவன்-குசன் என பிள்ளைகளுக்குப் பெயரிடுகிறார். இளவரசர்களாக அரண்மனையில் வாழ வேண்டிய குழந்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் அப்பா யாரென்பது சொல்லப்படாமலேயே வளர்கின்றனர். அவர்கள் சற்று வளர்ந்ததும் சீதாப்பிராட்டியார் நிலத்தைப் பிளந்து உள்சென்று தனது தாயான பூமாதேவிக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!