ஜெமினி அல்லது மிதுன ராசிக்கு கேதுகாரகனால் சற்று டென்ஷன் அதிகம் என்று புத்தாண்டுப் பலன்களில் சொல்லப்பட்டிருந்தது. அதை கவனிக்காமலோ என்னவோ கூகுள் தனது செய்யறிவுச் செயலித் திட்டத்திற்கு (generative AI Project) அதே பெயரை வைத்தது. இப்போது சோதனை மேல் சோதனை என்று பாடாத குறையாக நொந்து போயிருக்கிறது...
Author - சிவராமன் கணேசன்
`காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்றபோது காத்துவாங்கும் உடையெதுக்கு` என்பது தொண்ணூறுகளின் மத்தியில் வந்த ஹிட் பாடலின் வரி. பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது பலகாலம் வரையில் சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஆட்பட்டே இருந்திருக்கிறது. உடலை மறைப்பதைவிட உள்ளிருக்கும் ஆளைக் காட்டுவதே பேஷன் என்கிறது இப்போதைய...
பேருந்து சமவெளியிலிருந்து மலையேறத் தொடங்கியிருந்தது. காட்டின் ரீங்காரங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. மேகங்கள் கீழிறங்கி, மலைக்குள் உலாவி தரையைத்தொட முயற்சி செய்துகொண்டிருந்தன. குளிர் ஏறத்தொடங்கியது. எதிர் வெயிலில் நீலமாய்த்தெரிந்த மலைகளெல்லாம் தணிந்து, இப்போது கரும்பச்சைக்கு மாறத் தொடங்கியிருந்தன...
90களின் ஆரம்பத்தில் `கொலையுதிர்காலம்` என்ற தலைப்பில் சுஜாதா குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுதினார். கணேஷ், வசந்த் என்கிற அவரது பிரதான புனைவுப் பாத்திரங்கள் துப்பறியும் கதை அது. நகருக்கு வெளியே இருக்கும் ஒரு பண்ணை வீட்டில், திடீரென இரவில் எழுந்து நடமாடும் ஓர் ஒளியுருவம் பற்றித்தான் பிரதான வழக்கு...
Pots to Bots என்ற மிகப்பொருத்தமான துணைத்தலைப்பு கொண்டு நிகழ்ந்த கணித்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்தது, இந்தத் துணைத்தலைப்பின் மொத்த சாரம்சத்தையும் அனுபவித்து மகிழ்வது போன்று இருந்தது. கற்காலப்பானைத்தமிழைப்பற்றி நன்கறிந்து வகுப்பெடுத்த தமிழ்ப்பேராசிரியர். தற்போது அதே...
அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பல காமெடி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து உருவாக்கப்பட்ட ஒருமணி நேரத் தொகுப்பு அது. கிட்டத்தட்ட டேப் ரெக்கார்டர்...
முதன்முதலில் செல்ஃபோன்களின் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டபோது அது செல்வந்தர்களின் வசம் மட்டுமே செல்லும் இன்னொரு ‘ஏழைகளின் கைக்கெட்டா கச்சாப்பொருள்’ என்றுதான் சந்தை நினைத்தது, மக்களும் நினைத்தார்கள். ஆனால் மெல்ல மெல்லச் சாமானியனும் தொடும் விலைக்கு விற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே அதன் அவதாரங்கள்...
பொதுவாகவே ஜனவரி மாதம் கார்பரேட் உலகில் ஒரு குழப்பமான மாதமாக இருக்கும். ஒருபுறம், சென்ற வருட வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, அப்ரைசல் சதவீதம் அதிகரிக்குமா? சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்குமா என்ற ஆர்வங்கள் ஒருபுறம். ஒருவேளை இருக்கின்ற ப்ராஜக்டிலேயே இடம் இல்லாது, பெஞ்ச்சிலோ, மஞ்சள் கடிதாசு கொடுத்து...
புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்துவிட்டது. அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று ஆரூடம் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். அலுவலக அப்ரைசல்கள் தொடங்கிவிட்டன. கையோடு, கடந்த வருடம் முழுக்க உற்சாகத்தையும், கவலைகளையும் ஒருசேரக் கொடுத்துக்கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் வரும் ஆண்டில் என்னென்ன...
காஸ்பெல் (Gospel) என்கிற ஹீப்ரூ சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று நற்செய்தி கொண்டு வரும் தூதுவன் என்ற நேரடிப் பொருள். இரண்டாவது, இவ்வாறு நற்செய்தி அருளப்படும் நாளில், இறையை நோக்கி வணங்கும் வழிபாடு என்ற உட்பொருள். இப்படி நற்செய்தி, வழிபாடு என்ற உயர் ஆன்மிக வார்த்தையைத்தான் பேரழிவு ஏற்படுத்தும்...