Home » ஒரு வேலையிழப்புக் காலமும் சில போர்க்களப் பூக்களும்
அறிவியல்-தொழில்நுட்பம்

ஒரு வேலையிழப்புக் காலமும் சில போர்க்களப் பூக்களும்

பொதுவாகவே ஜனவரி மாதம் கார்பரேட் உலகில் ஒரு குழப்பமான மாதமாக இருக்கும். ஒருபுறம், சென்ற வருட வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, அப்ரைசல் சதவீதம் அதிகரிக்குமா? சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்குமா என்ற ஆர்வங்கள் ஒருபுறம். ஒருவேளை இருக்கின்ற ப்ராஜக்டிலேயே இடம் இல்லாது, பெஞ்ச்சிலோ, மஞ்சள் கடிதாசு கொடுத்து, வெளியிலோ தள்ளி விட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயங்கள் ஒருபுறமுமாக குளிர்கால நடுக்கத்திற்கு ஈடாக, மனதிற்கும் நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மாதமாகவே இருக்கும்.

அதை உறுதிசெய்வதுபோலவே, வரிசையாக உலகெங்கிலுமிருந்து வேலையிழப்புச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கூகுள், அமேசான் உள்ளிட்ட 46 முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து மட்டும் ஜனவரியின் முதல் பாதியிலேயே, 7500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்திருக்கிறது.

எப்போதும் நடக்கின்ற சடங்குதானே என்று இதனைக் கடந்துவிட முடியாது. இந்த முறை இதன் பின்னணிக்குச் சொல்லப்படும் காரணம், ஏ.ஐ. கடந்தசில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை உலகு கவலையோடு பார்த்துக்கொண்டு வந்திருந்தாலும், 2023-ல் அது பல்கிப்பெருகி, ஒரு பூதாகரமான நிலையை எட்டியது. அப்போதே அபாயமணி அடிக்கப்பட்டுவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!