Home » உங்க போனுக்கு அறிவிருக்கா?
அறிவியல்-தொழில்நுட்பம்

உங்க போனுக்கு அறிவிருக்கா?

முதன்முதலில் செல்ஃபோன்களின் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டபோது அது செல்வந்தர்களின் வசம் மட்டுமே செல்லும் இன்னொரு ‘ஏழைகளின் கைக்கெட்டா கச்சாப்பொருள்’ என்றுதான் சந்தை நினைத்தது, மக்களும் நினைத்தார்கள். ஆனால் மெல்ல மெல்லச் சாமானியனும் தொடும் விலைக்கு விற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே அதன் அவதாரங்கள் உருமாறத் தொடங்கியிருந்தன.

ஒரு பெரிய செங்கல் போல வெளிவந்த நோக்கியாவின் ஆரம்ப மாடல்களில் ஒன்றுதான் முதலில் நடுத்தரப் பொருளாதார நிலை கொண்ட மக்களுக்கு எளிய எள்ளுருண்டையாக இருந்தது. அங்கிருந்து தொடங்கி, மஞ்சள் நிறதிலிருந்து வெள்ளைப் பின்னணி நிறமாற்றம், டார்ச் லைட் ஒளி உமிழும் வசதி, வண்ணத்திரை, கேமரா அறிமுகம், படத்தை மெசேஜாக அனுப்பும் வகைமை, மூடித்திறக்கிற வசதி, வீடியோ எடுக்கும் அமைப்பு, இன்னும் தெளிவான – மேம்படுத்தப்பட்ட பிக்செல்கள் கொண்ட கேமராக்களின் அணிவகுப்பு, முன்பக்க கேமரா இணைப்பு, அலைபேசியிலேயே இணைய வசதி என்று படிப்படியாக மேலேறி வந்து, இப்போது ஒரு பெரிய உச்சத்தினை எட்டி, கம்பீரமாக வீற்றிருக்கிறது, அலைபேசியெனும் கைச்சிம்மாசன ராஜா.

அதன் ஆதார காரியமான அழைப்பின் அத்தியாவசியத்தையே மறக்கச்செய்து ஒரு கேமரா கருவி போலவும், ஒரு கையடக்க தொலைக் காட்சியாகவும்தான் பெரும்பாலும் உபயோகப்பட்டுக்கொண்டிருக்கிறது இப்போதெல்லாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!