Home » காஸ்பெல்லும் காஸா போரும்..
அறிவியல்-தொழில்நுட்பம்

காஸ்பெல்லும் காஸா போரும்..

காஸ்பெல் (Gospel) என்கிற ஹீப்ரூ சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று நற்செய்தி கொண்டு வரும் தூதுவன் என்ற நேரடிப் பொருள். இரண்டாவது, இவ்வாறு நற்செய்தி அருளப்படும் நாளில், இறையை நோக்கி வணங்கும் வழிபாடு என்ற உட்பொருள்.

இப்படி நற்செய்தி, வழிபாடு என்ற உயர் ஆன்மிக வார்த்தையைத்தான் பேரழிவு ஏற்படுத்தும் ஒரு செயற்கை நுண்ணறிவுச் செயலிக்கும் பெயராகச் சூட்டியிருக்கிறது இஸ்ரேல். காஸ்பெல் என்ற பெயரில் அது உருவாக்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் வழிதான் சென்ற வருடத்தில் (2023) காஸாவின் அத்தனை போர்க்குற்றங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தி, உலகையே குலை நடுங்க வைத்திருக்கிறது.

காஸ்பெல் வழியாக, இலக்குகளைக்கண்டறிய மனித சக்திகளை மிஞ்சிய செயற்கை நுண்ணறிவுப் புலனங்களைப் பயன்படுத்துவதால், மிகச் சக்தி வாய்ந்த பேரழிவுகளை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறது இஸ்ரேல். இதனை `வெகுஜனப் படுகொலைத் தொழிற்சாலை` என்று பெயரிட்டு முதன்முதலில் வெளியிட்டிருக்கிறது 972 என்கிற இஸ்ரேலியப் பத்திரிக்கை. பிறகுதான் உலகத்திற்கு இதுதொடர்பான தகவல் கசிந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஒரு கோட்பாடு ஒரு சித்தாந்தத்தை வைத்து நம்மை நம்மால் அழித்து ஒழிக்க முடியும் என்றால் நாம் எவ்வளவு கீழானவர்கள். இதற்கு காடுகளில் வாழும் குரங்கு கூட்டங்களே மேல்…

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!