Home » Archives for ரும்மான் » Page 6

Author - ரும்மான்

Avatar photo

இந்தியா

சந்திரயான் 3: இன்று நிகழும் சரித்திரம்

நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம்...

Read More
விழா

யானைக்கு பதில் யானை ரோபோ?

பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது...

Read More
உலகம்

ஒரு விரல் சாக்லேட்

ஒரு தாதிப் பெண் பசியோடு மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலைப் பக்கம் போகிறாள். சாக்லேட் ஃபிங்கர்ஸ் ஒரு பெட்டி வாங்கிப் பிரித்து, அவசர அவசரமாகச் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென்று கல்லுப் போல ஏதோ கனக்கிறது. கவனித்துப் பார்த்தால் சாக்லேட்டில் மனித விரல் துண்டு! அதிர்ச்சி, அருவருப்பு எல்லாம் சேர உதறித்...

Read More
உலகம்

ஒரு பாதிரியாரும் சில மர்மங்களும்

கோபித்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்கிடையிலோ, யுத்தத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையிலோ நடுவில் ஒரு தரப்பு சமாதானத்தின் தூதுவராக சம்பந்தப்படும் போது மிகமிகக் கவனமாக இருப்பது அவசியம். சண்டை பிடித்தவர்கள் திடீரென்று ஒன்று சேர்ந்து கொண்டு தூதுவரை உதைக்கும் நிலைகூட வரலாம்! இரண்டு பேரினது...

Read More
உணவு

உமாமியும் ஓர் உணவுப் பேட்டையும்

இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, உமாமி. இந்த ஐந்தும்தான் இன்றைய உணவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படைச் சுவைகள். மஞ்சள் என்கிற அடிப்படை வர்ணத்தை வேறு எந்த வர்ணக்கலவை கொண்டும் உருவாக்க முடியாதது போல இந்த அடிப்படைச் சுவைகளை வேறு எந்தச் சுவைகள் கொண்டும் உருவாக்க முடியாது. இதில் இந்த ஐந்தாவது ஆளான...

Read More
ஆளுமை

மெரில் பர்னாண்டோ: தேயிலைத் திருமகன்

உயர்ரக உணவுப் பண்டங்களைப் பரிமாறும் உலகின் உன்னதமான விருந்துபசாரங்களில், கம்பீரமாகக் கோப்பைகளில் மின்னும் பொருள் சிலோன் டீ. ஜப்பானின் வக்யு பீஃப், ஸ்கொட்லாந்தின் வைன், லண்டனின் ஜின் மற்றும் இந்தியாவின் சிக்கன் டிக்காவுடன் சரிசமமாகத் தோள் கொடுத்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்தில் மணக்க வைக்கும்...

Read More
கிருமி

ஒரு பெரு(ம்) பிரச்னை

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ மலை கம்பீரமாக ஓங்கி நிற்கும் நாடு பெரு. தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப் பக்கமாக பசிபிக் சமுத்திரத்தின் மருங்கில் அமைந்துள்ளது. இந்த வாரம் அந்த நாட்டு அரசாங்கம் ‘ஹெல்த் எமர்ஜன்சி’ எனப்படும் சுகாதார அவசரகால நிலையை அறிவித்துள்ளது...

Read More
இந்தியா

நிலவைப் பிடித்தல் பற்றிய குறிப்புகள்

வருகின்ற ஜூலை பதினான்காம் திகதி சந்திரனை நோக்கிப் புறப்படும் இந்திய விண்கலம் சந்திரயான் 03 திட்டத்தின் மொத்தப் பெறுமதி 615 கோடிகள்! நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கால் வைத்த நிலவுப் பரப்பில் இது வரை மொத்தம் பன்னிரண்டு மனிதர்கள் கால் வைத்திருக்கிறார்கள். அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு இதே ஜூலை மாதத்தில் அப்பல்லோ 11...

Read More
உலகம்

யானை போய் பறவை வந்தது டும் டும் டும்

நல்ல மயில்நீல நிறத்தில் முகமும், ஐந்தடி உயரத்தில் தீக்கோழி போன்ற கட்டுடலும் கொண்ட மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இருபது வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்த முதுராஜா என்கிற கொம்பன் யானையை ஜூலை மாத ஆரம்பத்தில் மீளப் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாகச் செய்த ஏற்பாடு...

Read More
உணவு

புற்றுச் சர்க்கரை: புறப்படும் புதிய பூதம்

“என்னடா? எதைச் சாப்பிட்டாலும் கான்சர் வரும் என்கிறீங்க?” என்ற பட்டியலில் இதோ இன்னுமொரு பண்டம் சேரப் போகிறது. ‘அஸ்பாடேம்’ (Aspartame) எனப்படும் செயற்கைச் சர்க்கரை. அஸ்பாடேம் புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடியது என்பதாக வரும் ஜூலை மாதம் பதினான்காம் திகதி உத்தியோகபூர்வமாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!