Home » ஒரு பெரு(ம்) பிரச்னை
கிருமி

ஒரு பெரு(ம்) பிரச்னை

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ மலை கம்பீரமாக ஓங்கி நிற்கும் நாடு பெரு. தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப் பக்கமாக பசிபிக் சமுத்திரத்தின் மருங்கில் அமைந்துள்ளது. இந்த வாரம் அந்த நாட்டு அரசாங்கம் ‘ஹெல்த் எமர்ஜன்சி’ எனப்படும் சுகாதார அவசரகால நிலையை அறிவித்துள்ளது. நரம்பு சார்ந்த நோயொன்றின் திடீர் அதிகரிப்பு காரணமாக தொண்ணூறு நாட்களுக்கு இந்த அவசரகாலப் பிரகடனம் நீடிக்க இருக்கிறது.

அமேசான் காடும், மச்சு பிச்சுவும், வானவில் மலையும், எண்ணற்ற நதிகளும், பழமை வாய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சித் தலங்களையும் கொண்ட எழில் கொஞ்சும் இந்த தேசத்தில் இப்போது என்ன அவசர கால நிலை..?

‘கீலன் பாரே சிண்ட்ரோம்’, (Guillan Barre Syndrome) என்றொரு நரம்பியல் பிரச்சினை. வாயில் நுழையாத பெயர் என்பதால் சுருக்கமாக GBS என்போம். திடீரென்று கால்களில் கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும். பின்னர் அப்படியே பாதங்கள் உறைந்து போகும். உணர்ச்சியற்ற அந்த நிலை படிப்படியாகக் கைகளுக்கும் பரவும். கொஞ்ச நேரத்தில் மொத்த உடலும் முடங்கி விடும்! என்ன ஒரு பயங்கரம்! GBS ‘ஆட்டோ இம்யூன் டிசீஸ்’ எனப்படும் ஒரு தன்னுடல் தாக்கு நோய்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!