Home » ஒரு பாதிரியாரும் சில மர்மங்களும்
உலகம்

ஒரு பாதிரியாரும் சில மர்மங்களும்

கோபித்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்கிடையிலோ, யுத்தத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையிலோ நடுவில் ஒரு தரப்பு சமாதானத்தின் தூதுவராக சம்பந்தப்படும் போது மிகமிகக் கவனமாக இருப்பது அவசியம். சண்டை பிடித்தவர்கள் திடீரென்று ஒன்று சேர்ந்து கொண்டு தூதுவரை உதைக்கும் நிலைகூட வரலாம்! இரண்டு பேரினது நம்பிக்கையை வெல்வதும் அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், எல்லாமே கடினமான காரியங்கள்தாம். தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையில் நக்கீரன் கோபால் தூதுவராக இருந்து சாதித்தவை பல. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நடுவில் நோர்வே அரசு பல நாள் பாலம் போட்டு வந்தது. அந்த வரிசையில் சிரியாவின் அரசாங்கத்துக்கும் தீவிரவாதக் குழு ஐஎஸ் (IS)க்கும் இடையில் சமாதானப் புறாவாக இருந்தார் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார். பாஸ்டர் போலோ. அவர் கடைசியாக ஐஎஸ் தலைமையகம் நோக்கி ஒரு செய்தியோடு போனவர்தான். காணாமலே போய்விட்டார்! 2023 ஜூலை 29 ஆம் திகதிக்கு சரியாகப் பத்து வருடங்களாகின்றன, பாஸ்டர் போலோ தலைமறைவாகி.

அன்று முதல் அவர் என்ன ஆனார் என்றே தெரியாத அவரது குடும்பம், ஃபாதர் திரும்பி வரும் வாய்ப்பு இருக்கிறதா, அவர் உயிரோடு இல்லை என்பதை ஒரு காணொலி மூலமாவது அறிவிப்பார்களா, இறுதிக் கிரியைகளையாவது செய்து அவரை மரியாதையோடு அனுப்பி வைப்பதற்கு உடலின் ஒரு பகுதி கூடக் கிடைக்காதா என்று காத்திருக்கின்றது. எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது, தனது சொந்த முயற்சியாலும், தனிப்பட்ட உந்துதலாலும் சிரியாவின் அமைதிக்காகப் பாடுபட்டு வந்த இத்தாலியர், முப்பது வருடங்களாக இறை சேவையில் ஈடுபட்டு வந்த ஓர் ஆன்மா, தற்போது எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருப்பது எந்த நீதிக்குள் வரும்? இது ஒரு பேரவலம்!

சம்பவம் நடக்கும் போது பாஸ்டருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது பிறந்திருந்தது. சிரியத் தலைநகர் டமஸ்கஸிருந்து வடக்கே எண்பது கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த “மர் மூஸா” கத்தோலிக்க மடாலயத்தில் சேவையில் ஈடுபட்டு வந்திருந்தார். அரபு மொழியில் நன்கு புலமை பெற்றிருந்தமையாலும், இஸ்லாத்தை ஒரு துறையாகப் பல்கலைக் கழகத்தில் கற்றுப் பட்டம் பெற்றிருந்தமையாலும் சிரிய மக்களோடு மிகுந்த நல்லிணக்கம் பேணி வந்தார். கிட்டத்தட்ட தன்னை ஒரு’சிரியன்’ என்றே அழைத்துக் கொண்டார். இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு, முழு மத்தியக் கிழக்கும் வரலாறு காணாத மக்கள் புரட்சியில் ஆட்டம் கண்டிருந்த போது, சிரியாவிலும் மக்கள் வீதிக்கு வரத் தொடங்கியிருந்தார்கள். பாஸ்டர் போலோவும் மக்களோடு மக்களாக வீதிக்கு இறங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!