“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...
Author - ரும்மான்
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் . அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின்...
காலை பதினொரு மணியிருக்கும். ரீட்டா தன் பாட்டியோடு உழுத நிலத்தில் கிழங்கு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தாள். சோவியத் தேசத்தின் வொல்கா நதிக் கரையில் அமைந்திருந்த செழிப்பான நிலமது. “பாட்டி, அதோ அங்கே பார்” வானத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் நடுநடுங்கியபடி பின்னே செல்கிறார்கள். இனந்...
அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை...
ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...
ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...
துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...