Home » யானைக்கு பதில் யானை ரோபோ?
விழா

யானைக்கு பதில் யானை ரோபோ?

பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது. புத்த பெருமானின் தந்தத் தாதுவினை வழிபட்டு, யானையின் மேல் ஏற்றி, நடனக்கலைஞர்களும் பாரம்பரிய வாத்தியக் குழுக்களும் புடைசூழ, நகர்வலமாக எடுத்துச் செல்லும் உலா. ‘எசல’ எனும் சிங்கள மாதத்தில் நாடு முழுவதும் சிறுசிறு பெரஹராக்கள் பல நடக்கின்றன. அவற்றின் மிகப்பெரும் தாயுற்சவம் இது. கண்டியின் அரச மாளிகையில் புனிதமாக வைக்கப்பட்டிருக்கும் தந்தத் தாது வருடமொருமுறை நகரையும் அதன் மக்களையும் தரிசித்து ஆசிர்வதிக்கிறது. இதன் பலனாக ஆகஸ்ட் முடிவில் மழை பொழிவதாகவும், நாட்டில் சுபிட்சம் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. விவசாயிகளும், வெப்பத்தைத் தாங்க முடியாத மக்களும், பெரஹராவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!