Home » யானை போய் பறவை வந்தது டும் டும் டும்
உலகம்

யானை போய் பறவை வந்தது டும் டும் டும்

காசோவரி

நல்ல மயில்நீல நிறத்தில் முகமும், ஐந்தடி உயரத்தில் தீக்கோழி போன்ற கட்டுடலும் கொண்ட மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இருபது வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்த முதுராஜா என்கிற கொம்பன் யானையை ஜூலை மாத ஆரம்பத்தில் மீளப் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாகச் செய்த ஏற்பாடு இது. பிரியாணித் தட்டைப் பிடுங்கிக் கொண்டு குச்சி மிட்டாயைக் கொடுத்தனுப்பியதைப் போல மிகுந்த அவமானமாகப் போய்விட்டது. காசோவரி (Cassowery) என்கிற பறவையினத்தின் இரண்டு ஆண்களும் ஒரு பெண்குட்டியுமாக மலேசிய விமானமொன்றில் பறந்து வந்து வலது காலை எடுத்து வைத்து இறங்கியுள்ளன. வண்ணங்கள் தெறிக்கும் புது விருந்தாளிகளைக் கட்டுநாயக்க விமான நிலையம் வரை சென்று வரவேற்று இலங்கையின் மிருக வைத்தியக் குழுவொன்று ஊடகங்களில் இடம்பெற்றிருக்கிறது.

“பறக்கவே முடியாத பறவைகளை’ அனுப்பி அவமானப் படுத்தியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் போட்டி போடுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!