இந்த ஆண்டு, இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 75வது ஆண்டு என்ற சிறப்பைப் பெற்றது. இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வோம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு எதை நோக்கி நகரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சட்டமன்றத் தேர்தல்கள்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா...
Author - அ. பாண்டியராஜன்
கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையைக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து உரையாடினார், மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி. கடந்த வாரம் எங்கெங்கும் பேசப்பட்ட இச்சந்திப்பின் பின்னணியை முரளி நம்மிடம் விவரித்தார். கூகுள் நிறுவனமும், ஒன்றிய அரசின் தகவல்...
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார் என 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கேரள மாநிலக் காவல்துறைப் பணியிலிருந்தவர். புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை, துணை தேசியப் பாதுகாப்பு...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன்...
2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம்...
ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை...
தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் காஷ்மீர் எனப் பன்னிரண்டு மாநிலங்களினூடாக 3500 கிலோமீட்டர்கள்...
சென்னை புத்தகக் காட்சி ஒவ்வோராண்டும் ஜனவரி மாதம் நடக்கிறது. தற்போது புத்தகக் காட்சிகளை அரசே பிற மாவட்டங்களுக்கும் பரவலாக்கியிருக்கிறது. அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி, எழுத்தாளர்களைப் புத்தகக் காட்சிகளில் பார்க்கும் சாத்தியம், புத்தகக் காட்சிக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும்...
கடன் கொடுப்பதற்கு எண்ணற்ற நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதிநிறுவன வங்கிகள், ஊரக வங்கிகள் என்று ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை மட்டும் நூற்றி முப்பத்தி ஏழு. பல அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளும் கடனை வாரி வழங்கத் தயாராக...