தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
Add Comment