Home » தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்
இந்தியா

தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்

சந்திரசேகர ராவ்

கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது பழங்கதையாகிப் போனதையும் நாம் பார்க்கிறோம். சந்திரசேகர ராவ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரைந்து கொண்டிருக்கிறது.

இளைஞர் காங்கிரஸில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்குச் சென்று அப்படியே ஒரு யூடர்ன் போட்டு தெலுங்கானா மாநிலமே லட்சியம் என்று கட்சி ஆரம்பித்தார் சந்திரசேகர ராவ். கோரிக்கை நிறைவேறிய நாளில் சோனியாவின் பங்கைப் புகழ்ந்த போது கட்சியைக் காங்கிரஸ் உடன் இணைக்கும் முகாந்திரம் இருப்பதாகவே பேச்சு இருந்தது.

தனக்குக் கிடைத்த நாயக பிம்பத்தை காங்கிரஸ் கட்சிக்குத் தாரை வார்க்காமல் தனிக் கட்சியாகவே போட்டியிட்டு முதல்வர் ஆனார். மாநிலத்தை உருவாக்கிய நானே அதைக் கட்டமைக்கவும் செய்வேன் என்றார். பத்தாண்டுக் கால ஆட்சியின் இறுதியில் மகாராட்ஷ்டிராவில் இருக்கும் தெலுங்கு வாக்குகளை நம்பி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை பாரதிய ராஷ்ட்ரிய சமிதியாக மாற்றினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!