Home » உரு – 1
உரு தொடரும்

உரு – 1

1. கேரித் தீவு

மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவன், ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். முதல் நாள். முதல் வகுப்பு. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து ஏதோ சொன்னார். எல்லாரும் பேனா, காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தனர். இவனோ எதுவும் விளங்காமல் சுற்றும் முற்றும் பார்த்தான்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுமி சினேகமாகப் புன்னகைத்தாள். விஜயலட்சுமி அவள் பெயர். உதவி செய்ய முன்வந்தாள்.

அவரவர் பெயரை எழுதிச் சட்டையில் ஒட்டிக் கொள்ளவேண்டும். அதுதான் ஆசிரியர் சொன்னது. முதல் நாள் வகுப்புக்கு வந்திருக்கும் குழந்தைகளின் பெயரை அறிந்து கொள்ளவும் நினைவில் வைத்திருக்கவும் எளிய வழி. விஜயலட்சுமி எழுதிக் கொடுத்த பெயரை அவன் தனது சட்டையில் ஒட்டிக் கொண்டு நாளெல்லாம் பள்ளி முழுக்கச் சுற்றிக் கொண்டிருந்தான். மாலையில் வீடு திரும்பினான்.

“நீ எதற்கு உன் தங்கை அமுதாவின் பெயரைச் சட்டையில் ஒட்டியிருக்கிறாய்?” என்று வீட்டில் உள்ளோர் கேட்ட பிறகுதான் அவனுக்கு அந்தச் சதி புரிந்தது. அந்தச் சுட்டிப் பெண் விஜயலட்சுமி, முத்துவின் தங்கை பெயரைக் கேட்ட போதே சுதாரித்திருக்க வேண்டும்.

பாதகமில்லை. வெகு விரைவில் பள்ளி முழுதும் அறிந்த பெயராக ஆனது அவன் பெயர் – முத்தெழிலன் முரசு நெடுமாறன். பிற மொழிகளைக் கற்றுக் கொண்டதோடு தன் தமிழ்ப் பற்றையும் விட்டுவிடவில்லை முத்து. பின்னாளில் மொழியே அவர் அடையாளம் ஆனது.

ஆனால், முத்துவின் கதை தொடங்கியது அங்கே அல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ரப்பர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையை அறிந்துகொள்ள உதவுகிறது. விறுவிறுப்பான நடை. வாழ்த்துகள்

  • முத்துவின் வரலாறு இதுவரை யாரும் எழுதாதது. சமகாலத்தில் வாழும் அவரை, எழுத்துலகம் கொண்டாட தவறியதை, இந்த தொடர் பூர்த்தி செய்யும். அருமையான ஆரம்பம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!