Home » உபி எனும் தீர்மானிக்கும் சக்தி
இந்தியா

உபி எனும் தீர்மானிக்கும் சக்தி

இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்குள்ளது.

மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள். தனித் தொகுதிகள் மட்டுமே 17. இதுவும் மற்ற எல்லா இந்திய மாநிலங்களை விடவும் அதிகம். இந்தியாவின் பிரதமராகத் தேவையான 272 தொகுதிகளில் சுமார் 30 சதவிகிதம் தொகுதிகள் உத்திரப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன. விரைவில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்த உள்ளனர். அதன்படி 128 தாெகுதிகளாக உயர்ந்து மெஜாரிட்டி மேஜிக் எண்ணில் 34 சதமானம் உத்திரப் பிரதேசம் என்றாகிவிடும். எனவே உத்திரப் பிரதேசத்தில் என்ன நடந்தாலும் அது இந்தியா முழுக்க பாதிப்பை ஏற்படுத்தும்.

மாநிலத்தில் பன்னெடுங்காலம் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். முதல்வர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் எல்லாரும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். ஒருதலைப் பட்சமான அதிகாரப் பரவல் மாநிலத்தைப் பின்தங்கிய நிலையிலேயே வைத்திருந்தது. இன்றும் இம்மாநிலம் பின்தங்கியிருக்க இதுவே முக்கிய காரணி. அதை மதச்சாயம் கொண்டு மறைத்து விடுகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!