Home » Archives for பா. ராகவன்

Author - பா. ராகவன்

Avatar photo

சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 3

3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 2

2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 1

1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...

Read More
வெள்ளித்திரை

இனி இல்லை இந்தத் திரை – 1

உதயம்: சில நினைவுகள் சென்னை உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது என்ற செய்தி அறிந்து சிறிது வருத்தமாக இருந்தது. இப்போது தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதில்லை என்றாலும், பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் திரையரங்கில்தான் அதிகமான படங்களைப் பார்த்திருக்கிறேன். உதயத்தில் நான் பார்த்த முதல்...

Read More
சிறுகதை

கதை – 1: பா. ராகவன்

எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிச் சொல்ல யாருமில்லாக் காலம் தொட்டு அந்தப் பேய் வசித்துக்கொண்டிருந்தது. அது பேய்ப்பிறப்பெடுத்து வாழத் தொடங்கிய காலத்துக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தலைமுறைப் பேயும் தனது பேய்க்காலத்தை முடித்துக்கொண்டு முக்திக்கோ வேறொரு பிறப்புக்கோ சென்றுகொண்டே இருந்தும் அது மட்டும் பேயாகவே...

Read More
உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...

Read More
உலகம்

பழைய குருடி கதவைத் திறக்கிறாள்

ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...

Read More
உலகம்

ஊர் கூடிக் கொலை செய்வோம்!

நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள...

Read More
எழுத்து

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 15

15. முடியாத யுத்தம் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு. இயேசுநாதர் பிறப்பதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதக் குடியேற்றம் நிகழ்ந்த பிராந்தியம் என்று தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. தனிச் சிறப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதனாலேயே ஒரு தேசத்தின் எல்லைகளை ஆளுக்குக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!