‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது. சிங்கப்பூர் எயார்லைன்ஸில் பணிபுரியும் பெண்களின் சீருடை அது. ‘சரங் கெபாயா’ (sarong kebaya) எனப்படுகிறது. ஒரே விதமான ஆடை அலங்காரங்களைக் கண்டு பழகியவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் ‘படிக்’ (batik) துணியலங்காரம் பதித்த ஆடை!
இதைப் படித்தீர்களா?
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
Add Comment