Home » உயிருக்கு நேர் – 47
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 47

47 ஏ.கே.செட்டியார்  (04.11.1911 –  10.09.1983)

வாழ்வில் திட்டமிட்டு, தான் இதுவாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்து அதுவாக ஆனவர்கள் பலர் உண்டு. அதற்கான திட்டமிட்ட உழைப்பு, தயாரிப்பு அவர்களை அத்துறையில் விற்பன்னராக மாற்றும். சாதனையாளர்களாக அறியப்பட்ட மனிதர்களில் இவர்கள் பெரும்பான்மையோர். ஆனால் சிலர் வேறுவகையான சாதனையாளர்கள். வாழ்வின் போக்கில் வருகின்ற எல்லாத் துறையிலும், தொடுகின்ற அனைத்துப் புலத்திலும் தேர்ச்சி அடைந்து கொண்டே செல்கின்ற அரிதினும் அரிதான வகை மனிதர்கள். அத்தகைய ஒருவரைப் பற்றித்தான் இந்தப் பத்தியில் அறிந்து கொள்ளப் போகிறோம்.

அவர் பின்னாட்களில் பெரும்புகழ்கொண்டு  அறியப்பட்ட துறை பயண இலக்கியத் துறை. ஆனால் அவர் மிகச் சிறந்த புகைப்படக்காரரும் கூட; அருமையான ஆவணப்படங்களை எடுத்தவர். வணிகத்தில் சிறந்திருந்தவர். உலகம் சுற்றிய பயணி. பதிப்பாளராக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தரமான ஒரு மாத இதழை நடத்தியவர்; மகாத்மா காந்தியைப் பற்றி உலகிலேயே முதன்முதலாக ஒரு ஆவணப்படம் எடுத்தவர்; ஆவணப் படம் என்றால் அற்ப சொற்பமானதில்லை; முதல் வடிவத்தில் அது ஏறக்குறைய 50,000 அடிகள் எடுக்கப்பட்டிருந்த படச்சுருள்! இரண்டரை ஆண்டுகள் அதற்காகப் பெரும் முயற்சிகளை, பெரும் பொருட்செலவில் மேற்கொண்டவர். இன்றளவும் அவர் எடுத்த ஆவணப் படம் மகாத்மாவைப் பற்றிய ஆவணப்படங்கள் அனைத்துள்ளும், அரியவற்றில் ஒன்றாக, சிறந்தவற்றில் ஒன்றாகக் கருதப்படுவது. எதேச்சையாகப் பத்திரிகாசிரியராக ஆன அவர், பத்திரிக்கைத் துறைக்குத் தேவை என்பதற்காக புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ள யப்பான் சென்றார். யப்பான் சென்றிருக்கிறோமே, புகைப்படக்கலையைக் கற்கிறோமே என்று சில புகைப்படங்களோடு, யப்பானைப் பற்றி அவர் பார்த்தவற்றை எழுதித் தொகுத்து ஒரு கட்டுரையாகத் தான் வேலைபார்த்த பத்திரிகையில் பிரசுரிக்கிறார்; அக்கட்டுரை பெரும் வரவேற்பைப் பெறுகிறது. பின்னர் யப்பானில் தான் இருந்த காலம் வரையான நிகழ்வுகள், இடங்கள் என்று தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதுகிறார்; அவை தொகுக்கப்பட்டுப் புத்தகமான போது, அந்த நூல் இன்னும் வரவேற்பைப் பெறுகிறது. யப்பானில் பெற்ற புகைப்படப் பயிற்சியை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்று பயிற்சி பெறுகிறார். அந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக வரைய, அக்கட்டுரைகள் இன்னும் இன்னும் புகழையைம் வரவேற்பையும் பெறுகின்றன.

மொத்த உலகத்தையும் அவரது பயணங்கள் மூலம் இரண்டு முறை சுற்றி வந்தவர்; கடலிலும், வானிலுமாக ஏறக்குறைய நான்கு இலக்கம் மைல்கள் தூரம் பயணித்தவர்; அவ்வாறு உருவான அவர், நூறாண்டு கழிந்தும், இன்றளவும் தமிழில் பயண இலக்கியத்துக்கான ஆளுமைகளில் முக்கியமான ஆளுமைப் பெயராக விளங்குகின்ற பெயருக்குச் சொந்தக்காரர். அவரது நூல்கள் எல்லாம் ஏ.கே.செட்டியார் என்ற பெயரில்தான் வெளிவந்தன. ஆயினும் கையொப்பத்தைத் தமிழில் அ.க.செட்டியார் என்றே இடும் வழமையைக் கொண்டிருந்தவர். எங்குமே தன்னை முன்னிலைப்படுத்தாமல், தமது புகைப்படத்தைக் கூட வெளியிடாமல், தமிழ்ப் பண்பாட்டை ஆவணப் படுத்தியவர்களுள் அவர் முக்கியமானவராக வாழ்ந்தவர். பயண இலக்கியப் பிதாமகர் கோட்டையூர் அ.இராம. அண்ணாமலை கருப்பன் செட்டியார் ஆகிய ஏ.கே.செட்டியார் அவர்களே இன்றைய உயிருக்கு நேர் பகுதி 47’க்கான நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!