Home » திறக்க முடியாத கோட்டை – 23
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 23

23 – பன்முனை உலகை நோக்கி..

23-10-2002. டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ.

“ரஷ்யக் காவலர்கள் களமிறங்கி விட்டார்கள். இது என்ன வாயு என்று தெரியவில்லை. ஒருவரையும் உயிருடன் விட்டுவைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. எங்களைக் காப்பாற்ற, உங்களால் செய்யக் கூடியதை உடனே செய்யுங்கள்.” திரையரங்கிலிருந்த ஆன்யா கெஞ்சிக் கொண்டிருந்தார். மாஸ்கோவின் எதிரொலி எனும் வானொலி நிகழ்ச்சியில், இது நேரடியாக ஒளிபரப்பானது.

அதன்பின் இரண்டு தோட்டாக்களின் சத்தம் கேட்டது. செச்சனியத் தீவிரவாதிகள் பணயக் கைதிகளில் இருவரைக் கொன்றனர். “கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும், உயிருடன் வீடு திரும்புவோம் என்று எங்களுக்கு நம்பிக்கையில்லை. மரணத்தின் மூலம் அல்லாவிடம் செல்லவே வந்திருப்பதாகவும், எங்களையும் அழைத்துச் செல்வதாகவும் தீவிரவாதிகள் எங்களிடம் கூறினார்கள்.” என்றார் இதை நேரில் பார்த்த ஓல்கா. உயிர் பிழைத்தவர்களுள் ஓல்காவும் ஒருவர்.

மீண்டும் ரஷ்யாவிற்குள் செச்சனியத் தீவிரவாதிகள். வலிமையான எதிரிப்படையின் முன், சிறிய குழுக்களில் உறுதியுடன் போராடும் கொரில்லாப் போர்முறையை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். காரியம் ஆக வேண்டுமெனில், பொதுமக்களையும் பணயம் வைப்பவர்கள். சென்றமுறை மருத்துவமனை கைப்பற்றப்பட்டது போல, இம்முறை இந்தத் திரையரங்கு. ரஷ்யப்படை செச்சனியாவிலிருந்து வெளியேற வேண்டுமென்ற அதே கோரிக்கை.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது, சிறப்பு இஸ்லாமிய படைப்பிரிவு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!