ஆப்கனை ஆளும் தாலிபன் அரசின் நவீன திருவிளையாடல்களின் அடுத்தக் காட்சி அரங்கேறியிருக்கிறது. இம்முறை பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அழகு நிலையங்கள் எல்லாம் இல்லை. புத்தகங்கள். ஆம். படிக்காதே. எழுதாதே. பதிப்பிக்காதே. புத்தகத் துறையை ஓர் அபாயகரமான துறையாக அவர்கள் கருத ஆரம்பித்திருப்பது இப்போது தெரிய...
Tag - உலகம்
இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே...
கடந்த வருடம் இதே காலப்பகுதிகளில் கோட்டாபய ராஜபக்சே இலங்கை மக்கள் புரட்சிக்குப் பயந்து ஜனாதிபதி மாளிகையின் பின்கதவு வழியாகக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஓடி அங்கிருந்து விமானப்படைத் தளத்திற்குப் போய் ஒளிந்திருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று சுற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து...
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைந்தது. ஐந்து முறை பிரதமராகி ஒரு முறையேனும் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கே சவால்விட்ட ரணில், ஜனாதிபதியாவார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் உலகம் சிரித்திருக்கும்...
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதியில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் தன்னிச்சையாக வந்து சேர்வார்கள். அந்தளவுக்கு மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு மதரசாக்களில் மூளைச் சலவை செய்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக, எவ்வளவு உந்தித் தள்ளினாலும் யாரும்...
பால்முகம் மாறா, சிரித்த முகம் கொண்ட கிலியெப் (8 வயது). சுருட்டை முடியுடன் சற்றே வளர்ந்த எவோர் (10 வயது). இருவருக்கும் கிடைத்த பொறுப்பான அண்ணன் டிமஃபி (11 வயது). மூவருக்கும் ஓயாமல் சண்டை, கைபேசிக்காக. பப்ஜி விளையாட அல்ல, படிப்பதற்கு. போரின் உபயத்தால் பள்ளிப் பாடங்கள் அனைத்தும் இதன் மூலமே. சண்டையும்...
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ மலை கம்பீரமாக ஓங்கி நிற்கும் நாடு பெரு. தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப் பக்கமாக பசிபிக் சமுத்திரத்தின் மருங்கில் அமைந்துள்ளது. இந்த வாரம் அந்த நாட்டு அரசாங்கம் ‘ஹெல்த் எமர்ஜன்சி’ எனப்படும் சுகாதார அவசரகால நிலையை அறிவித்துள்ளது...
நல்ல மயில்நீல நிறத்தில் முகமும், ஐந்தடி உயரத்தில் தீக்கோழி போன்ற கட்டுடலும் கொண்ட மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இருபது வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்த முதுராஜா என்கிற கொம்பன் யானையை ஜூலை மாத ஆரம்பத்தில் மீளப் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாகச் செய்த ஏற்பாடு...
வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது. மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க...
ஜூன், 2022. இடம்: புனித சோபியா பேராலயம், கீவ், உக்ரைன். நிகழ்வு: போரில் பலியான 200 உக்ரைனியக் குழந்தைகளுக்கு நினைவேந்தல் ‘உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் மிக முக்கியமானவர்கள். ஆதலால் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்துபோன அவர்களும் இதையே விரும்புவார்கள்,” என்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கா...