‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...
Tag - இலங்கை
‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...
கடந்த வருடம் ஜூன், ஜூலை காலப் பகுதிகளில் இலங்கையில் மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரும் நூதன மோசடி ஒன்றின் நாற்றம் நீதிமன்றப் படிகளிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ‘ஸ்போர்ட்ஸ் செய்ன்’ எனப்படும் போலியான கிரிப்டோ கரன்ஸி முதலீட்டுத் திட்டத்தில் தோரயாமாக அறுபது மில்லியன்...
“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...
முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...
எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று...
மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது. பட்டாம்பூச்சிகள்...
மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச்...
இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...
கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன்...