71. உதவாதவன் அஜிகர்த்தனின் தந்திரோபாயங்கள் எதுவும் தன்னை வீழ்த்தாததன் காரணத்தைக் குத்சன் என்னிடம் கேட்க விரும்பினான். நான் அவனுக்கு பதிலளிப்பதில்லை என்பதால் நேரடியாக அவனே கேட்காமல் அவனது பிதாவிடம் சொல்லிக் கேட்கச் சொன்னான். நான் அவனிடம் உண்மையைச் சொன்னேன். ‘நான் உன் மகனுக்கு எந்த உதவியும்...
Author - பா. ராகவன்
70. தெய்வம் தொழான் ‘உன்னைத் தாக்கவும் முடியவில்லை; வீழ்த்தவும் முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. நீ ஏன் உன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது?’ என்று அஜிகர்த்தன் வினவினான். குத்சனுக்கு அவன் மீண்டும் மீண்டும் அதனைக் கேட்டது மிகவும் சலிப்பூட்டியது. ‘இதோ பார், என்னாலும் உன்னைக் கொல்ல...
69. கருநிழல் எப்போதும் போல அன்றைக்குப் புலரும் நேரம் சரஸ்வதியின் கரைக்குச் சென்றேன். எனக்கு முன்னால் குத்சன் அங்கே அமர்ந்திருக்கக் கண்டேன். அது எனக்குப் புதிதாக இருந்தது. என்னிடம் எதையோ சொல்வதற்காக அவன் காத்திருக்கிறான் என்று நினைத்தேன். புலர்ந்து ஒரு நாழிகை கழிந்து நான் திரும்பலாம் என்று நினைத்து...
68. அந்நியன் யாரென்று யாரும் அறியாத யாரோ ஒருவனின் வருகையில் எல்லாம் தொடங்கியது. வித்ருவின் புரத்துக்கு அப்பால் தென் மேற்கே உள்ள சமவெளியில் சிகாரிகளின் குடியிருப்பு ஒன்று உண்டு. எண்பது குடும்பங்கள் அங்கே வசித்தன. வேட்டையாடுதலைத் தொழிலென்று சொல்லிக்கொண்டாலும் வழிப்பறியும் கொலை, கொள்ளையும் அவர்தம்...
67. ஒலி உடல் யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச் சொல்லிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு நாழிகையில் விடியத் தொடங்கிவிடும். மித்திரனின் முதல் கிரணத்தைப் பூசிக்கொண்டு அது தோன்றும் கணத்துக்காகக் காத்திருந்தேன். எத்தனையோ...
66. சொல்லாதது பூர்ணிமை கடந்து சில தினங்கள்தாம் ஆகியிருந்தன என்றாலும் வானில் வெளிச்சமில்லாமல் இருந்தது. ருத்ர மேருவின் சர்சுதி கடக்கும் அடிவாரமெங்கும் பெரிய பெரிய பாறைகள் நிறைந்திருக்கும். பாறை நிறைந்த இடங்களில் தருக்கள் இராது. மேருவின்மீது சிறிது தூரம் ஏறிச் சென்றால்தான் வனம் தொடங்கும். நான்...
65. விபூதி யோகம் வானுக்கும் பிருத்விக்கும் இடைப்பட்ட வெளியினைப் போல மனம், இருப்பது தெரியாதிருக்க வேண்டும். சூனியமல்ல. பேரொளியுமல்ல. உள்ளபடியே இருப்பது. அப்படித்தான் அது இருக்க வேண்டுமென்று எப்போதும் நினைப்பேன். தியானத்தில் அமரும்போது எண்ணியவண்ணம் மனத்தைக் குவித்துவிட்டுப் பிறகு எண்திசைக்கும் பறக்க...
64. காப்பு அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச் சுற்றித் திரியலாம் என்று விடிந்தபோதே தோன்றியது. ஒரு விதத்தில் அப்படியொரு தனித்த பயணம் அவசியம் என்று நினைத்தேன். வித்ருவுக்கு வந்த நோக்கம் ஒன்றாகவும்...
63. உதிர்த்தவன் இன்னொரு மனிதனின் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில் இருப்பதே அத்தருணத்தில் என் மனநிலைக்குச் சரியென்று தோன்றியது. அதன் பொருட்டே சாரன் வித்ருவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு ருத்ர மேருவுக்கு வந்தேன். எனக்குத் தெரியும். இடையூறுகளற்ற தவத்தின் பொருட்டு ரிஷிகள் அங்கே வருவார்கள். சிறிய...
62. இடக்கண் நான் தனித்திருக்கிறேன். அலை புரண்டோடும் சரஸ்வதியின் கரையில் அதே நியக்ரோதத் தருவின் அடியில்தான் அமர்ந்திருக்கிறேன். கிளிகளும் குருவிகளும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து சத்தமிடுகின்றன. உழைத்துக் களைத்து வீடு திரும்பும் உழவர்கள் அலுப்பில் சிறிது ஓய்வெடுக்க என்னருகே அமர்கிறார்கள்...