Home » யார் அந்தத் தங்க மகன்?
கண்காட்சி

யார் அந்தத் தங்க மகன்?

தாஜ்மஹாலை வடிமைக்கும்போது தலைமைச்சிற்பி, ஷாஜஹானிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். முக்கிய ஸ்தூபியைச் சுற்றி அமைக்கப்படுகிற நான்கு மினாராக்களை சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்த கோணத்தில் அமைக்க வேண்டும் என்றும் உயர்ந்து நிற்கும் எதுவுமே பூமியின் மீதான புவியீர்ப்புவிசைக் காதலை எந்நேரமும் வெளிப்படுத்தி சாயத் தயாராக இருக்கும் என்றும். ஆகவே ஒருவேளை விழுந்தாலும் மையக் கட்டடத்தின் மேல் விழாமல் வெளியில் விழட்டுமே என்ற நோக்கத்திலேயே இம்மினாராக்கள் சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்த நிலையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர்களின் எழுத்து மேசையும் தாஜ்மஹால் போலத்தான். பொக்கிஷம் என்பது ஒரு பக்கம் இருக்க, எது எந்தக் கோலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது. எப்போது எது சாயும், எது சரியும், எது விழும், எது உடையும் என்று தெரியாத அளவிற்கு அறிவின் செறிவிற்கு ஏற்றாற்போலவே தங்கள் மேசையையும் புத்தகங்கள், குறிப்புப்புத்தங்கள், பேனாக்கள் என பல்வேறு சாதனங்களையும் நிறைத்து வைத்திருக்கும் இயல்பினர். இதற்கு நடுவே வைக்கப்பட்ட இங்க் பாட்டிலும் இந்த மினாராக்கள் போல. ஒருவேளை கைதவறிக் கொட்டினால், மொத்த மேசையும் பாழாகுமே.

இதைப் புரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனமொன்று புவியீர்ப்பு விசையைச் சமன் செய்யுமாறு தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையை ஒத்த இங்க் பாட்டிலை உருவாக்கியிருக்கிறது. கை தவறி தட்டிவிட்டாலும், கீழே விழாமல், ஒரு சிறிய நடனமாடி எழுத்தாளனின் அந்த நேரத்துப் பதற்றத்தைக் குறைக்கும் அளவிற்கு ஒரு மைப்புட்டியைத் தயாரித்திருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு பேனா ஸ்டாலிலும் நம்மைப் புன்னகைக்க வைக்கிற, திகைக்க வைக்கிற, மகிழ வைக்கிற, பதற வைக்கிற பல விஷயங்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது சென்னை, அடையார் FIKA வளாகத்தில் நடைபெற்ற பேனாக் கண்காட்சி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!