Home » ஆபீஸ் – 50
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 50

50 நிறைவு

சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி.

உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார்.

முந்தைய நாள் இரவு, சுந்தர ராமசாமியின் வீட்டிலிருந்து போக மனசேயில்லாமல் பப்புவுடன் கிளம்பிப்போனவன், செய்ய ஒன்றுமில்லாமல், அவர் ஏதோ சாமான்களை உருட்டிக்கொண்டிருக்க, படுத்துத் தூங்கிவிட்டான்.

காலையில் விழித்துப் பார்த்தால், பூணூல் நரம்புபோல குறுக்காய் ஓடிய வளைந்த பனியன் முதுகுடன் பப்பு  வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. வேட்டி விலகியிருக்க மேல் வேட்டி பக்கத்தில் கிடந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அதை எடுத்து வெற்றுடம்பின் கூச்சத்தை மறைத்துக்கொண்டான்.

அருகில் போய், ‘ஹலோ’ என்றான்.

கையில் படித்துக்கொண்டிருந்த பேப்பருடன் அண்ணாந்து பார்த்தவர், ‘வாங்கோ. நல்லா தூங்கினேளா. பாத்ரூம்புல எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன். பல் வெளக்கிட்டு வந்தீங்கனா, கொளத்துல  குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போலாம்.’ என்றார்.

என்னது குளமா. அய்யோ நீச்சல் தெரியாதே என்று துணுக்குற்றான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை. போகிற வழியில் ராமசாமிக்கு அவர் என்னவோ ஆகவேண்டும் என்று சொன்னார். சரியாகப் புரியவில்லை.

அவருடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தால், இப்படி இவருடன் அனுப்பிவைத்துவிட்டாரே என்று சுந்தர ராமசாமி மீது நேற்றிரவு இருந்த ஆதங்கம் பல் துலக்கும்போது கொஞ்சம் குறைந்திருந்தது; பச்சைப் பசேலென்றிருந்த குளத்தைக் கண்டதும் மனம் நிறைந்ததில் காணாமலே போய்விட்டது.

பப்பு, ஆட்கள் குளித்துக்கொண்டிருந்த பக்கமாகப் படிகளில் இறங்க, இவன் கொஞ்சம் தள்ளி குறுக்காக இறங்கப் பார்த்தான்.

‘அங்கப் போகாதீங்கோ. பாஷி வழுக்கிடும். ஜாக்கிரதை’ என்றார்.

எதற்கு வம்பு என இவன் அவரருகில் வந்ததும், ‘நீச்சல் தெரியுமோல்லியோ’ என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!