இடாலோ கால்வினோ
ஆங்கிலத்தில்: Tim Parks
தமிழில்: ஆர். சிவகுமார்
எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது.
இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருடுவார்கள். திருடியதை மூட்டை கட்டிக்கொண்டு விடியற்காலையில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவார்கள்; வந்து பார்க்கும்போது தங்களுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.
ஆகவே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்தார்கள். யாருக்கும் எந்த இழப்பும் இல்லை; ஏனென்றால், ஒவ்வொரு நபரும் அடுத்தவரிடமிருந்து திருடினார்; அடுத்தவர் இன்னொருவரிடமிருந்து திருடினார்; இப்படியேபோய் கடைசி நபர் முதல் நபரிடம் திருடும்வரை சுழற்சி தொடரும். விற்பவரும் வாங்குபவரும் தவிர்க்கமுடியாத வகையில் ஒருவரையொருவர் ஏமாற்றும்விதமாகவே அங்கே வணிக நடவடிக்கைகள் இருந்தன. தன்னுடைய குடிமக்களிடமிருந்து திருடிய குற்ற அமைப்பாகவே அரசு இருந்தது; குடிமக்களும் தங்களுடைய பங்குங்கு அரசை ஏமாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். இப்படியாக வாழ்க்கை அங்கே பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. யாரும் பணக்காரனுமில்லை, யாரும் ஏழையுமில்லை.
எப்படியென்று நமக்குத் தெரியவில்லை, ஒருநாள் ஒரு நேர்மையான மனிதன் அந்த நாட்டுக்கு வந்து வசிக்கத்தொடங்கினான். இரவு வேளைகளில் கோணிப்பையும் லாந்தருமாக வெளியே போகாமல் புகை பிடித்தபடியும் நாவல்கள் படித்தபடியும் அவன் வீட்டிலேயே இருந்தான்.
திருட வந்தவர்கள் அவனுடைய வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு உள்ளே போகவில்லை.
Add Comment