Home » கிருமி கொன்ற சோழர்கள்
விருது

கிருமி கொன்ற சோழர்கள்

காடலின் காரிகோ-ட்ரூ வெய்ஸ்மேன்

இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Physiology or Medicine) அமெரிக்காவினைச் சார்ந்த உயிர்வேதியியல் விஞ்ஞானி (Biochemist) காடலின் காரிகோ (Katalin Karikó) அம்மையாருக்கும் நோய் எதிர்ப்பு அறிவியல் விஞ்ஞானி (Immunologist) ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) அவர்களுக்கும் இணையாக வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய கண்டுபிடிப்புதான் 2020-22-ஆம் ஆண்டுகளில் உலகினையே ஆட்டிப்படைத்த கோவிட் நோயினை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

கோவிட் தனது பேயாட்டத்தினை ஆடத் தொடங்கியபோது எப்படியாவது யாராவது ஒரு தடுப்பூசியினைக் கண்டுபிடித்துவிட மாட்டார்களா என உலகம் ஏங்கிக் கொண்டிருந்ததை நாம் அறிவோம். தடுப்பூசித் தயாரிப்பு என்பது ஒன்றும் அவ்வளவு குறுகிய காலக்கட்டத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று இருந்த நிலையினை மாற்றியது எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி என்ற ஒரு புதிய வகைத் தடுப்பூசி. இந்த எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி உருவாக்கத்தினைச் சாத்தியப்படுத்தியது காடலின் மற்றும் ட்ரூ ஆகியோரின் கண்டுபிடிப்புகள்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!