Home » G இன்றி அமையாது உலகு – 4
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 4

4. திட்டம் ஒன்று

லாரி, செர்கே அறிமுகம் ஒரு புன்னகையோடு நிகழ்ந்துவிட்டாலும், இரண்டு இண்டெலெக்சுவல்கள் சந்திக்கும்போது நிகழும் எல்லாக் கருத்து மோதல்களும் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருந்தன. ஒவ்வொரு சந்திப்பின்போதும், ஒவ்வொரு உரையாடலின்போதும் அவர்களுக்குள் அறிவுச்சிதறல்கள் தீப்பொறி பறப்பதையொத்த வீர்யத்துடன் பறந்து கொண்டிருந்தன. கருத்து மோதல்களின் உச்சத்தில்தான் ஒவ்வொரு முறையும் அவர்கள் இணைந்திருந்தார்கள், என்றாலும் அது அவர்களின் நட்பை எவ்விதத்திலும் முறிக்கவில்லை.

மாறாக, மொத்தப் பல்கலைக்கழகத்தின் மொத்த உரையாடற் களத்திலும் இவர்கள் இருவரின் கரமே ஓங்கியிருந்ததை எண்ணி, தனியே பேசும்போது சிரித்துக் கொண்டார்கள். லாரியின் அறிவுக்கூர்மையையும், அவரது கோடிங் எழுதும் திறனையும் செர்கே மெச்சிக்கொண்டிருந்தார் என்றால், செர்கேயின் தர்க்கக் கூர்மையினையும், புதுப்புது ஐடியாக்களாக கொட்டிக்கொண்டே இருக்கும் அவரின் தனித்திறனை லாரியும் தனியே இருக்கும்போது எண்ணி வியந்து கொண்டிருந்தனர். இதுவே அவர்களின் நட்பை இறுக்கியது. பின்னாளில் அவர்கள் இணைந்து செயலாற்றுவதற்குத் தோதான அடித்தளத்தை இந்த நாள்கள்தான் கட்டமைத்துக் கொண்டிருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!