Home » வீறுகொண்ட விவசாயிகள்
இந்தியா

வீறுகொண்ட விவசாயிகள்

புது டெல்லியை நோக்கி விவசாயிகள் அணிவகுப்பு

2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன.

அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்மைச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருந்தது. பதின்மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த கடுமையான போராட்டங்களின் விளைவாக அந்த மூன்று சட்டங்களும் திரும்பப்பெறப்பட்டன.

இப்போது அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர் விவசாயிகள். விவசாயிகள் சங்கப் போராட்டம் 2.0 என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் இப்போது தீவிரமாகியிருக்கிறது. இதில் பெரும் பங்கெடுத்திருப்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

சம்யுக்தா கிஷான் மோர்சா, கிஷான் மஸ்தூர் மோர்சா உள்ளிட்ட 37 விவசாயச் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றனர். நாடு முழுவதுமுள்ள அனைத்து விவசாயச் சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்திருக்கின்றனர்.

விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிஷன் முன்வைத்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும். லக்கிம்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். விவசாய நிலங்களைக் கையகப்படுத்த உருவாக்கப்பட்ட 2013-ஆம் ஆண்டுச் சட்டத்தை அமலாக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளைச் செயல்படுத்த மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இந்தப் போராட்டத்தின் வாயிலாக.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!