Home » போராடத் தகுதியுள்ள கனவு
பெண்கள்

போராடத் தகுதியுள்ள கனவு

மாளவிகா ஹெக்டே

ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். 7000 கோடி கடன். சித்தார்த்தா தன் மனைவி மக்களை மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் கைவிட்டுச் சென்றார். எல்லாப் பொறுப்புகளையும் கையில் எடுத்துக் கொண்டு இன்று கம்பெனியை ஏறுமுகத்துக்கு மாற்றி இருக்கிறார் மாளவிகா சித்தார்தா ஹெக்டே.

மாளவிகா ஹெக்டே கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள். மாளவிகாவின் அம்மா பிரேமே, சமூகச் செயற்பாட்டாளர். சகோதரி தொழில்முனைவர். அரசியல் ஆர்வமும் உண்டு. மாளவிகா படித்தது பொறியியல் பட்டப்படிப்பு. சித்தார்த்தாவை 1991-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். இயற்கை மீது ஆர்வம். ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டுப் பராமரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு சித்தார்த்தா, மாளவிகாவுடன் உணவகம் ஒன்றுக்குச் சென்றபோது தோன்றியதுதான் காஃபி டே யோசனை. ஐந்து ரூபாய் காப்பியை யாரேனும் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்குவார்களா என்ற சந்தேகம் மாளவிகாவுக்கு இருந்தது.

மற்ற காஃபி கடைகள் போல இங்கு காஃபி குடிக்க மட்டும் மக்கள் வருவதில்லை. இலவச வைஃபை. நண்பர்கள் கூடிப் பேச, காதலர்கள் காதலைச் சொல்ல மற்றும் சந்தித்துப் பேச, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் பெண் பார்க்க, வியாபாரம் பேச, திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் புதிய திரைப்படம் குறித்துப் பேச என்று தனிப்பட்ட, தொழில் மற்றும் கலை சார்ந்த அனைவரும் சந்திக்கும் ஒரு பொது இடத்தின் அடையாளக் குறியீடு கஃபே காஃபி டே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!