2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...
Author - சிவராமன் கணேசன்
இனிப்பில்லாத விருந்தில், சம்பிரதாயத்துக்காக இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிற சர்க்கரைபோல, பல தேர்தல்களாகத் தேர்தல் அறிக்கை வெளியீடு என்பது ஏதோ பெயருக்கு நடக்கும் சடங்காகவே இருந்தது. நீண்ட நெடுங்காலங்காலமாய்த் தொடரும் சில பல மார்க்கண்டேயப் பிரச்னைகளை வைத்துக்கொண்டு உருவாகி, அலங்காரமாக வழவழத் தாளில்...
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...
அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும் கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும் ரசிகர் பட்டாளமும், திரைத்துறையின் பால் தாக்கம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் செல்லுமிடமெல்லாம் தொடர்வதும், திரைவழி பெருகிய செல்வாக்கும், அந்த...
தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி...
2022 செப்டம்பரில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், அதன் தலைவர் ஸ்டாலின், `தி.மு.க.வின் முதல் எதிரி பா.ஜ.க.தான், அதை எதிர்க்கக் கட்சியினர் முழு மூச்சுடன் தயாராக வேண்டும்` என்று சொன்னார். கிட்டத்தட்ட அந்தத் தருணம்தான், தமிழகத்தில் கடந்த 45 வருடங்களாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே இருந்த...
இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்த லட்சுமணனையும், வானர சேனையையும் காக்க, ஆஞ்சநேயர் இமயமலைப்பகுதியிலிருந்து துரிதமாக சஞ்சீவிமலையைத் தூக்கிவந்து மூலிகை வைத்தியம் செய்ததை சிறுவயதிலிருந்தே கதைகளாகக் கேட்டிருக்கிறோம். பத்துத் தலை, புஷ்பக விமானம், நீண்ட வால் சிம்மாசனம் போல அதையும் இன்னொரு மாயாஜால...
குறைக்கடத்திகள் என்று சற்று கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும் செமி கண்டக்டர்களின் (semi conductor) ஆகிருதி மிகமிகப் பெரியது. ஒரு நாளின் அத்தியாவசியக் காரியங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மம் அது. அதுவன்றி நம் நாளை அசையவிடாத செல்ஃபோனில் தொடங்கி...
முன்பெல்லாம் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மீதான ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முன்னணியிலேயே இருந்த நிறுவனமென்றால்… கண்ணைக் கட்டிக்கொண்டு ‘ஓப்பன் ஏ.ஐ.` திசையை நோக்கி விரல் நீட்டி விடுவார்கள். கடந்த ஓரிரு வருடங்களாகத்தான், கணினித் தொழிலெனும் தண்டலை எடுத்த எல்லா தண்டல்காரர்களும் தங்களை செய்யறிவு...
தாஜ்மஹாலை வடிமைக்கும்போது தலைமைச்சிற்பி, ஷாஜஹானிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். முக்கிய ஸ்தூபியைச் சுற்றி அமைக்கப்படுகிற நான்கு மினாராக்களை சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்த கோணத்தில் அமைக்க வேண்டும் என்றும் உயர்ந்து நிற்கும் எதுவுமே பூமியின் மீதான புவியீர்ப்புவிசைக் காதலை எந்நேரமும் வெளிப்படுத்தி...